பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தாலும் இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை முடிவு அறிவிப்பை தொடர்ந்து காலை முதல் ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் இறுதியில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 362.12 புள்ளிகள் ஏற்றம் பெற்றது.
தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 98.50 புள்ளிகள் உயர்ந்தது. காலையில் எழுச்சியுடன் தொடங்கிய சந்தை, இந்திய ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கூட்டத்தின் முடிவு அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருந்தது.
வங்கி வட்டி விகித செய்யப்படவில்லை என நண்பகலில் சந்தை உற்சாகம் தொற்றிக் கொண்டது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
பங்கேற்பாளர்கள் ரிசர்வ் வங்கியின் சீரான அணுகுமுறையை உற்சாகத்துடன் வரவேற்றனர். மேலும் பணப்புழக்கத்தை அதிகரிக்க மாற்று நடவடிக்கைகளையும் ஆர்பிஐ கவனிக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் முதலீட்டாளர்கள் இடையே உற்சாகத்தை மேலும் ஏற்படுத்தி விட்டது என்று வர்த்தகர்கள் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.