அம்மனாக நடிக்க தயார்! லேடி சூப்பர் ஸ்டாருக்கு டப் கொடுக்க போகும் பியூட்டி குயின்!!

0
264
Ready to act as a goddess! Beauty queen going to give dub to lady superstar!!
Ready to act as a goddess! Beauty queen going to give dub to lady superstar!!

அம்மனாக நடிக்க தயார்! லேடி சூப்பர் ஸ்டாருக்கு டப் கொடுக்க போகும் பியூட்டி குயின்!!

பிரபல நடிகர் R.J.பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியான படம் மூக்குத்தி அம்மன்.இப்படத்தில் R.J.பாலாஜி,நயன்தாரா,ஊர்வசி,மௌலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.R.J.பாலாஜிக்கு அருள் தரும் அம்மனாக நடித்து நயந்தாரா அவர்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.மொத்த குடும்ப பாரத்தையும் தாங்கும் ஒரு இளைஞனுக்கு அவன் கேட்க்கும் வரங்களை அம்மன் கொடுப்பது தான் இப்படத்தின் கதை.

இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்ட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியானது.R.J.பாலாஜி படங்களில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பதிற்கேற்ப மூக்குத்தி அம்மன் முழுவதும் காமெடி கலந்த சிந்தனை நிறைந்திருக்கும்.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இரண்டாவது பாகம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.இதில் நயன்தாராவின் அம்மன் கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.தற்பொழுது விடாமுயற்சி,தக் லைப் உள்ளிட்ட படங்களில் படு பிஸியாக நடித்து வரும் த்ரிஷா,மூக்குத்தி அம்மன் பாகம் இரண்டில் நடிக்க இருக்கிறார் என்ற லேட்டஸ்ட் தகவலால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு முன்னர் நடிகை அனுஷ்காவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.ஆனால் சில காரணங்களால் அவரால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதரித்திரம் வராமல் தடுக்க கட்டாயம் இந்த நாட்களில் முடி, நகம் வெட்டாதீர்கள்..!!
Next articleஅணுமின் நிலைய வேலைவாய்ப்பு: 13 காலிப்பணியிடங்கள்.. MBBS மற்றும் NURSING படித்தவர்கள் விண்ணப்பிங்க!