அரண்மனை 3 பார்க்க ரெடியா!! சுந்தர்.சி-யின் அடுத்த படைப்பு ரெடியானது!!

Photo of author

By CineDesk

அரண்மனை 3 பார்க்க ரெடியா!! சுந்தர்.சி-யின் அடுத்த படைப்பு ரெடியானது!!

தமிழ் சினிமாவில் பல முன்னணி திரைப்படங்கள் உள்ளது. தமிழ் சினிமாவில் பல காதல் திரைப்படம், காமெடி திரைப்படம், மற்றும் திகில் திரைப்படம் என அனைத்தும் கலந்த திரைப்படங்கள் உள்ளது. இதில் 2014 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி நகைச்சுவை திகில் திரைப்படம் அரண்மனை. இந்த திரைப்படத்தை இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி இயக்கியுள்ளார். இப்படத்தில் சுந்தர்.சி, வினய், ஹன்சிக மொட்வானி, லட்சுமி ராய், ஆண்ட்ரியா, சந்தானம், கோவை சரளா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
ஜமீன்தார் குடும்ப வாரிசுகளான சித்ரா லட்சுமணன் கோவை சரளா மற்றும் வினய் ஆகியோர் தங்களின் பாரம்பரிய அரண்மனையை விற்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள் மூவரும் கையெழுத்திட்டால் தான் அந்த அரண்மனையை விற்க முடியும் என்பதால் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். இந்த அரண்மனையை வாங்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறார் சரவணன். மேலும் இந்த அரண்மனையை விற்க விடாமல் அரண்மனையில் உள்ள ஏதோ ஒரு துஷ்ட சக்தி தடுக்கிறது மேலும் அதை மீறி அந்த அரண்மனையை விற்றார்களா என்பது என்பது தான் கதை சுருக்கம். இதில் நகைச்சுவை கலந்த திகிலுடன் சொல்லியுள்ளார் இயக்குனர். இதைத் தொடர்ந்து இந்த படம் மாபெரும் வெற்றியை அடைந்ததால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கினார் சுந்தர்.சி.

இந்த திரைப்படம் 2016 ஆவது ஆண்டில் வெளியாகி இருந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் சுந்தர்.சி, சித்தார், ஹன்சிகா, பூனம் பாஜ்வா, த்ரிஷா, சூரி, கோவை சரளா, மனோபாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இது 2004 இல் வெளியான அரண்மனை படத்தின் தொடர்ச்சியாக பாகம். மேலும் இரண்டாவது பாகம் முதல் பாகத்தை விட கொஞ்சம் சுமாராக இருந்ததால் மக்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்கவில்லை. எனவே இயக்குனர் சுந்தர்.சி இப்படத்தின் மீண்டும் ஒரு தொடர்ச்சியான மூன்றாவது பாகத்தை எடுத்து முடித்துள்ளார்.

இதில் சுந்தர்.சி, ஆர்யா, ஆண்ட்ரியா, ரிஷி கண்ணா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் இரண்டாவது பாகத்தை விட இந்தப் பாகம் மிகவும் நகைச்சுவை கலந்த த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து முதல் பார்வையில் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படத்தில் தற்போது அடுத்த சில புகைப்படங்கள் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.