பிகில் படத்தை போல ரியல் சிங்கப்பெண்! போலீஸ் வேலைக்காக கர்ப்பிணி செய்த காரியம்!

பிகில் படத்தை போல ரியல் சிங்கப்பெண்! போலீஸ் வேலைக்காக கர்ப்பிணி செய்த காரியம்!

வரும் காலக்கட்டத்தில் பெண்கள் தலைதூக்கி நிற்கும் அளவிற்கு வந்துவிட்டனர்.அந்தவகையில் அனைத்து துறைகளிலும் மேலோங்கி காணப்படுகின்றனர்.பல துறைகளுக்கு பெண்கள் மேலோங்கி சென்றாலும் சில இடங்களில் அவர்களை குறைத்தே பேசும் நிலை இன்றளவும் உள்ளது.ஆண்களுக்கு நிகராக பெண்கள் ஓர் போதும் வர முடியாது என்று கூறி கொண்டிருக்கும் கூட்டம் இன்றளவும் காணப்படுகிறது.

அவற்றை உடைக்கும் பொருட்டு பெண்கள் பல துறைகளில் வெற்றி வாகை சூடி வருகின்றனர்.அதேபோல தான் தற்போது கர்நாடகாவில் ஓர் சம்பவம் நடந்துள்ளது.அச்சம்பவத்தை கண்டு மக்கள் அனைவரும் பெருமளவு வியப்படைந்துள்ளனர்.கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் பால்கி என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் அஸ்வினி.இவருக்கு போலீஸ் ஆகவேண்டும் என்பதையே லட்சியமாக வைத்திருந்தார்.

இன்ஸ்பெக்டர் ஆக வேண்டுமென்றால் முதலில் ஓர் டிகிரி முடித்திருக்க வேண்டும்.அதனால் இவர் இன்ஜினியரிங் டிகிரியை முடித்தார்.அதனையடுத்து போலீஸ் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் கடும் முயற்சி எடுத்து வந்தார்.முதலில் போலீஸ் வேலைக்கு எழுத்து தேர்வு எடுக்கப்படும் அதில் தேர்ச்சிபெற்றால் மட்டுமே அடுத்தகட்ட நிலைக்கு போக முடியும் அஸ்வினி இருமுறை எழுத்து தேர்விலும் தோல்வியையே தழுவினார்.

அதனையடுத்து அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.திருமணத்திற்கு பிறகும் அவர் குடும்பத்தினரும் அவரது லட்சியத்தை புரிந்து கொண்டு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தனர்.இவரும் தனது தோல்வியை கண்டு பின்வாங்காமல் தொடர்ந்து செய்த முயற்சியில் மூன்றவது முறையாக எழுத்து தேர்வில் தேர்ச்சியடைந்தார்.தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்படும் அவ்வாறு உடல் தகுதி தேர்வின் போது அஸ்வினி 2 மாதகாலம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

அவர் தனது கர்ப்பத்தைக் கூட பொருட்படுத்தாமல்,இந்த முறை நாம் பின்னடைவை சந்திக்க கூடாது என்று எண்ணி நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டார்.அவ்வாறு கலந்து கொண்டு அங்கு நடத்தப்படும்  400 மீட்டர் தூரத்தை 2 நிமிடத்தில் கடந்து தேர்ச்சியடைய வேண்டும்.அந்த தேர்வில் இவர் ஒன்றரை நிமிடத்திலேயே 400 மீட்டர் தூரத்தை கடந்து முடித்தார்.

கர்ப்பிணி பெண்கள் ஆரம்ப கட்டக் கர்ப்பகாலத்தில் எந்தவித வேலைகளும் செய்யக்கூடாது என்றே கூறுவார்.அந்தவகையில் பிகில் படத்தில் கர்ப்பமாக இருக்கும் பெண் வெற்றியை அடைந்தது போல நிஜ வாழ்க்கையில் தற்போது இவர் தனது கர்ப்பத்தை பொருட்படுத்தமால் தனது லட்சியத்தை அடைந்துள்ளார்.இதனால் அப்பெண்ணை ரியல் சிங்கப்பெண் என புகழ்ந்து வருகின்றனர்.

Leave a Comment