ரஜினி பாதுகாப்பு வேண்டாம் என சொன்னது ஏன்? உள்குத்து அரசியல் !
ரஜினிகாந்த் தனது வீட்டுக்குப் பாதுகாப்பு வேண்டாம் என சொன்னதின் பின்னணியில் அரசியல் காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களை சந்தித்தாலே ஏதாவது ஒரு சர்ச்சை உருவாகி விடுகிறது. இது போல கடந்த மாதம் துக்ளக் பொன்விழாவில் பேசிய அவர், பெரியார் பற்றி கூறிய சில செய்திகள் சர்ச்சையானது. இதையடுத்து பெரியாரிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் அவரது பாதுகாப்புக்காக போலிஸார் அவர் வீட்டு முன் நிறுத்தப்பட்டனர்.
இதைஉயடுத்து இப்போது அந்த பாதுகாப்பு வேண்டாம் என உதவி காவல் ஆணையர் திருநாவுக்கரசிடம் அவர் சொல்லியுள்ளதாக செய்திகள் வெளியானது. தன் வீட்டின் முன் நிற்கும் போலிஸாரால் அக்கம்பக்கத்தினருக்கு அசௌகர்யம் ஏற்படுவதாக அவர் கருதுவதால் இப்படி சொன்னதாக சொல்லப்பட்டது. ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல அது என்று ஒரு செய்தி உலாவர ஆரம்பித்துள்ளது.

ரஜினி எப்படியும் இன்னும் சில மாதங்களில் கட்சி ஆரம்பிக்க போகிறார். அதனால் அவரை பார்த்து ஆதரவுக் கொடுக்க பலரும் அவரது வீட்டுக்கு வந்து செல்கின்றனர். இதில் வேறு கட்சிகளில் இருப்பவர்களும் அடக்கம். இந்நிலையில் வீட்டின் முன் போலீஸார் நின்றால் வருபவர்களைப் பற்றிய தகவல் ஆளும் கட்சிக்கு சென்றுவிடும் என ரஜினி சந்தேகிக்கிறாராம். அதனால்தான் இந்த பாதுகாப்பு ஏற்பாட்டை கேன்சல் செய்ய சொல்லி வேண்டுகோள் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.