ஆட்டோகிராப் படத்தில் நடிக்க மறுத்த விக்ரம் மற்றும் பிரபுதேவா – காரணம் இதுதான் !

0
141

ஆட்டோகிராப் படத்தில் நடிக்க மறுத்த விக்ரம் மற்றும் பிரபுதேவா – காரணம் இதுதான் !

இயக்குனர் சேரன் தன்னுடைய மெஹா ஹிட் படமான ஆட்டோகிராஃபில் முன்னணி நடிகர்களான பிரபுதேவா மற்றும் விக்ரம் இருவரும் நடிக்க மறுத்தக் காரணத்தை சொல்லியுள்ளனர்.

சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த சேரன் பிக்பாஸ் புகழ் வெளிச்சத்தின் மூலம் மீண்டும் களத்தில் இறங்கியுள்லார். சமீபத்தில் அவர் நடித்த ராஜாவுக்கு செக் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சிம்பு, விஜய் சேதுபதி இருவருக்கும் கதை சொல்லியுள்ள அவர் விரைவில் இயக்கத்திலும் முழுவீச்சாக இறங்க  இருக்கிறார்.

இந்நிலையில் தன் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமான ஆட்டோகிராப் படத்தில் முன்னணி நடிகர்களான விக்ரம் மற்றும் பிரபுதேவா ஏன் நடிக்க மறுத்தனர் என்பதற்குப் பதில் அளித்துள்ளார். சமீபத்தில் அளித்த நேர்காணலில் முதலில் ‘ ஆட்டோகிராஃப் படத்தில் நடிக்க பிரபுதேவாவைதான் ஒப்பந்தம் செய்திருந்தோம். கடன் எல்லாம் வாங்கி அட்வான்ஸ் கொடுக்க ஒரு நாள் தாமதமானதால் அவர் இந்த படத்தில்நடிக்க மறுத்து விட்டார்.

அதே போல விக்ரமுக்குக் கதை சொன்னென். அவருக்குக் கதை பிடித்திருந்ததால் அட்வான்ஸ் கொடுத்தோம். அப்போது நான் பாண்டவர் பூமி படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். அவரும்  ஜெமினி படத்தில் நடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி போனார். ஆனால் அந்த படம் ரிலீஸானதும் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியைப் பெற்று ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிவிட்டார். அதனால் மென்மையானக் கதையம்சம் கொண்ட இந்த படம் வேண்டாம் என முடிவு செய்துவிட்டார்.

பிறகு பல ஹீரோக்களிடம் கதை சொன்னேன். சிலருக்குப் பிடித்திருந்தது. சிலருக்குப் பிடிக்கவில்லை. அதன் பின்னர்தான் நானே நடிப்பது என முடிவானது.’ எனக் கூறியுள்ளார். அதன் பின்னர் ஆட்டோகிராப் படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்றது வரலாறு.

Previous articleசக மாணவார்களின் கேலி: தற்கொலை செய்துகொள்வேன் என சொல்லி அழுகை! நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!
Next articleநான் தாம்ப்பா பைக் திருடன்: நல்லவங்களை மக்கள் புரிஞ்சுப்பாங்க ஆனா கொஞ்சம் லேட் ஆகும்!