வேறு ஒருவருடன் தொடர்பு அடுத்து கருகலைப்பு? நடிகை சமந்தா விவாகரத்திற்கு காரணமென்ன?

Photo of author

By CineDesk

வேறு ஒருவருடன் தொடர்பு அடுத்து கருகலைப்பு? நடிகை சமந்தா விவாகரத்திற்கு காரணமென்ன?

 

தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா.

 

தமிழில் சிம்பு,திரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா திரைபடத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இணைந்து நடித்தனர்.இதன் பின்னர் இருவரும் இணைந்து மேலும் பல படங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் காதலிப்பதாக அறிவித்து கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களின் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ மத அடிப்படையில் நடைபெற்றது.இதையடுத்து இருவரும் திரைத்துறையில் சிறந்த தம்பதிகளாக பேசப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து கடந்த சில மாதங்களாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு உள்ளதாகவும்,இருவரும் பிரிய போவதாகவும் வதந்திகள் வெளியாகின.இதனை உறுதி செய்யும் வகையில் சில தினங்களுக்கு முன் சமந்தா தன்னுடைய பெயரின் பின்னால் உள்ள கணவர் குடும்ப பெயரை நீக்கியிருந்தார்.இதனையடுத்து இருவரும் பிரிவதாக தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர்.

இதையடுத்து ரசிகர்கள் பலரும் நடிகை சமந்தாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர்.அதே நேரத்தில் விவாகரத்துக்கு காரணம் என்ன என்றும் ஆராய்ந்து வந்தனர்.அந்த வகையில் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என பல வதந்திகளும் பரவி வருகிறது.

 

இந்நிலையில் நடிகை சமந்தா விவாகரத்து குறித்து மீண்டும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் ‘ என் மீது அக்கறை காட்டுபவர்களுக்கும் என்னை பற்றி வரும் வதந்திகளை எதிர்த்து நிற்பவர்களுக்கும் நன்றி. நான் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறேன், எனக்கு குழந்தை வேண்டாம் என்றும், நான் கருகலைத்துள்ளேன் என்றும் பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

விவாகரத்து என்பதே வலிமிகுந்தது. நான் இதிலிருந்து மீண்டு வர நேரம் தேவைப்படுகிறது. என் மீதான இந்த தனிப்பட்ட தாக்குதல்கள் தொடரத்தான் செய்யும். ஆனால், இதனை இனியும் அனுமதிக்கமாட்டேன். அவர்கள் கூறும் எதுவும் என்னை உடைக்காது என்பதை உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.