அதிமுகவின் தலைமைகள் சந்திப்பு! பின்னணி என்ன?

Photo of author

By Sakthi

இன்று காலை சென்னை எழும்பூரில் இருக்கின்ற ஒரு தனியார் விடுதியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை செய்து இருக்கிறார்கள். இது தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், தற்சமயம் இருவரும் எதற்காக சந்தித்தார்கள் என்பதற்கான காரணம் வெளியாகியிருக்கிறது.

சமீபத்தில் மறைந்த ஓபிஎஸ் சகோதரர் பாலமுருகனின் மறைவிற்கு துக்கம் விசாரிப்பதற்காகவும், நேற்றையதினம் சென்னையில் நடந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற 9 மாவட்டச் செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன என்பது தொடர்பாக ஆலோசனை ஈடுபடுவதற்கும் இந்த சந்திப்பு நிகழ்ந்தது என தெரியவந்திருக்கிறது.

அதோடு நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்று கொள்ளவில்லை என்ற காரணத்தால், மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே மறுபடியும் பனிப்போர் ஆரம்பித்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகத் தொடங்கியது. இந்த சூழ்நிலையில், தற்போது இருவரும் சந்தித்து தங்களுக்கு இடையே எந்த முரண்பாடும் கிடையாது என்று நிரூபித்திருக்கிறார்கள்.

இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், காமராஜ் என்ற அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்ததாக தெரிகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகளுடன் உரையாடி வருவதாக ஆடியோக்கள் வெளிவரும் சூழ்நிலையில் பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி உள்ளிட்டோர் சந்தித்து பேசியிருப்பது அதிமுகவினர் இடையே ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.