நியாய விலை கடை ஊழியர்களுக்கு இந்த தேதியில் விடுமுறை! அரசு வெளியிட்ட தகவல்!
பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி, சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து.அந்த அறிவிப்பினை தொடர்ந்து கடந்த தினங்களுக்கு முன்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 9 ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.மேலும் பொங்கல் பரிசானது டோக்கனில் குறிப்பிடப்பட்ட தேதி மற்றும் நாளில் மக்கள் அதனை பெற்று கொள்ளாலாம்.அதனை பெற தவறியவர்கள் இன்று பெற்றுக்கொள்ள ஏதுவாக இருக்க இன்று நியாவிலை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில் தமிழகத்தில் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்பட்டு வருகின்றது.அதனை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 27 ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.ஆனால் அதனை ஜனவரி 16 விடுமுறை நாளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளனர்.

