அரசியல் அழுத்தம் காரணமா?!.. உணவுப் பாதுகப்பு துறை அதிகாரி சதீஷ் பணியிட மாற்றம்!..

Photo of author

By அசோக்

அரசியல் அழுத்தம் காரணமா?!.. உணவுப் பாதுகப்பு துறை அதிகாரி சதீஷ் பணியிட மாற்றம்!..

அசோக்

satish

தமிழகத்தின் பல ஹோட்டல்கள் மற்றும் சின்ன சின்ன உணவகங்களிலும் கலப்படம் மற்றும் தரம் குறைந்த உணவு பரிமாறப்பட்டு வருகிறது. சைவமோ, அசைவமோ அதை இப்படித்தான் சமைக்க வேண்டும், இவ்வளவு நேரத்திற்கு மேல் அதை பயன்படுத்தக்கூடாது என விதிமுறைகள் இருக்கிறது. ஆனால், 60 சதவித உணவகங்கள் அதை பின்பற்றுவதில்லை. அந்த உணவகங்களில் சாப்பிடும் பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.

ஹோட்டலில் சாப்பிடும் பிரியாணியில் கரப்பான் பூச்சி, சிக்கனில் புழு என தொடர்ந்து செய்திகளை பார்ப்பது அதிகரித்துவிட்டது. இதில் கொடுமை என்னவென்றால் ‘உணவில் புழு கிடக்கிறதே இப்படி கொடுக்கலமா?’ என கேட்டால் ஹோட்டல் நிர்வாகம் அதற்கு சரியான பதிலையும் சொல்வது இல்லை. எனவே, குறைந்தபட்சம் அதை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து விடுகிறார்கள். பெரும்பாலான உணவகங்களில் சிக்கன் உள்ளிட்ட மாமிசங்களை பல நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்துகிறார்கள். அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவது இல்லை. பொதுமக்களின் ஆரோக்கியத்தின் மீது அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. உணவு மட்டுமில்லை. மீன்கள், காய்கறிகள், பழங்கள், பல தின்பண்டங்கள் என எல்லாவாற்றிலும் கலப்படங்கள் வந்துவிட்டது.

கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் பல இடங்களிலும் ரெய்டு செய்து பல கடைகளை சீல் வைத்தவர் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார். மேலும், ஒரு பொருளின் தரத்தை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியவர் இவர். எனவே, இவரை பொதுமக்களுக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் சென்னை திருவல்லிக்கேனியில் உள்ள ஹோட்டல் பிலால் உணவகத்தில் சாப்பிட்ட 20 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனவே, அங்கு சென்று சோதனை நடத்திய சதீஷ்குமார் பிலால் ஹோட்டலுக்கு சீல் வைத்தார்.

satish

அதன்பின் அண்ணா சாலையில் உள்ள பிலால் ஹோட்டலில் சாப்பிட்ட சிலருக்கும் உடலில் பிரச்சனை ஏற்பட்டது. உடனே, அங்கு சோதனை செய்ய சதிஷ்குமார் அங்கு சென்றார். ஆனால், கடையின் முன்பே நின்று கொண்டிருந்த ஊழியர்கள் செல்போனை அவரிடம் கொடுக்க யாரோ ஒருவர் சதீஷிடம் பேசினார். அதன்பின் சோதனை செய்யாமல் அங்கிருந்து கிளம்பி சென்றார் சதீஷ். அதன்பின் சதீஷுக்கு உடல் பதட்டம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

bilal
bilal

இந்நிலையில்தான் சதீஷ் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரி பதவியிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார். பிலால் ஹோட்டல் முன் சதீஷிடம் செல்போனில் பேசியது யார்?.. அரசியல் அழுத்தம் காரணமாகவே சதீஷ் இடமாற்றம் செய்யப்பட்டாரா? என்கிற கேள்விகள் பலருக்கும் எழுந்துள்ளது. நேர்மையான அதிகாரிகளை அரசியல்வாதிகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க மாட்டார்கள் என்றே பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.