சற்றுமுன்: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 800 பேருக்கு HIV பாதிப்பு!! வெளியான பரபரப்பு தகவல்!!
உலகில் குறிப்பிட்ட சில நோய்களுக்கு தற்பொழுது வரை குணப்படுத்தக்கூடிய மருந்து கண்டுபிடிக்க முடியாமல் தான் உள்ளது. அதில் ஒன்றுதான் எச்ஐவி, இது பாதுகாப்பற்ற உடலுறவால் உண்டாகிறது. மேற்கொண்டு ஒரே ஊசி மற்றும் ரத்தத்தை மாற்றி செலுத்துவது உள்ளிட்ட காரணங்களாலும் எச்ஐவி தொற்று ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு ஊடுருவுகிறது.
அந்த வகையில் திரிபுராவில் 800-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஹெச்ஐவி தொற்று உறுதியாகி உள்ளது. திரிபுராவில் இளைஞர்கள் அதிகப்படியானோர் சமீப காலமாக கஞ்சா உள்ளிட்ட மது போதைக்கு அடிமையாகியுள்ளனர். இது குறித்து விசாரணை செய்யும் பொருட்டு 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சோதனை செய்யப்பட்டது.
இவ்வாறு சோதனை செய்ததில் அனைவரையும் அதிர்ச்சியடையும் வகையில் தகவல்கள் வெளியாகியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் சோதனை செய்தது மட்டுமின்றி அங்கு பயிலும் மாணவர் மற்றும் மாணவிகளையும் பரிசோதனை செய்துள்ளனர். இதில் கிட்டத்தட்ட 828 மாணவர்களுக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. குறிப்பாக 47 பேர் இதனால் உயிரிழக்க நேரிட்டது. மாணவர்கள் இந்த தொற்றால் பாதிப்படைந்த தகவலானது திரிபுராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் போதைக்கு அடிமையாகி ஒருவர் உபயோகித்த ஊசியை மற்றொருவர் உபயோகித்த காரணத்தினால் இவ்வாறு தொற்றி ஏற்பட்டிருக்கும் என்று கூறுகின்றனர். மேலும் இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மாணவர் மற்றும் மாணவிகள் மிகவும் வசதி படைத்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு அவர்கள் படிப்பதற்காக வந்ததாகவும் மீண்டும் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.