சாதனை படைத்த மௌனராகம் சீரியல்!வைரலான வீடியோ!

Photo of author

By Parthipan K

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் பலரையும் கவர்ந்த ஒன்று மௌனராகம். இந்த நாடகத்தில் வழக்கம்போல நாடகத்தில் உள்ள கதையை கொள்ளாமல் புதுவிதமான கதையை  கொண்டிருந்ததே இதன் வெற்றியின் ரகசியம் ஆகும். 

அப்பாவைத் தேடி செல்லும் ஒரு ஐந்து வயது குழந்தையின் கதைதான் இந்த மௌன ராகம் பாகம் 1. இந்த கதை தமிழ் மக்களின் இடத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் 2020 செப்டம்பர் 19 ஆம் தேதியோடு நிறைவு பெற்றது.குழந்தை கிருத்திகாவின் கேரக்டரை வைத்து இந்த கதை நகர்ந்தது. ஷமிதா, ராஜப்ப ரமேஷ், சிப்பி, சீமா என பலர் இந்த சீரியலில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த சீரியலின் அடுத்த பாகம் சீசன் 2 விரைவில் வரப்போகிறது காண டீஸரை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இதன் புரோமோ 1.2 மில்லியன் பார்வையாளர்களை இரண்டே நாட்களில் பெற்று சாதனை படைத்துள்ளது.

இரண்டாம் பாகத்தில் உள்ள சக்தி எப்படி இருப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்துவரும் நிலையில் அந்தப் புரோமோவில் சக்தி யார் என்று அனைவருக்கும் தெரிந்துவிட்டது.இந்த கேரக்டரில் நடிப்பது நடிகை ரவீனா ஆவார்.இவர் ராட்சசன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.