“சீக்கிரமே குணமாகிவிடுங்க…” சமந்தாவுக்கு நம்பிக்கை வார்த்தைகள் சொன்ன சூப்பர் ஸ்டார்!
சமந்தா கடந்த சில மாதங்களாக மையோசிட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.
நடிகை சமந்தா தனக்கு ஏற்பட்ட மையோட்டிஸிஸ் என்ற உடல்நலப் பிரச்சனை குறித்து பகிர்ந்துள்ளார். அதில் “கடந்த சில மாதங்களாக நான் மையோட்டிசிஸ் எனும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டேன். இதில் இருந்து முழுவதும் மீண்டதும் இதை அறிவிக்கலாம் என இருந்தேன். ஆனால் நாம் நினைத்ததை விட இது அதிக காலம் எடுத்துக் கொள்கிறது.
எனது மருத்துவர்கள் நான் முழுமையாக குணமாகிவிடுவேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். உங்கள் அன்புதான் இந்த கடினமான நாட்களைக் கடந்து வர உதவுகிறது. குணமாவதற்கு வெகு அருகில் இருப்பதாக நான் உணர்கிறேன். இதுவும் கடந்து போகும்” எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து இப்போது ட்வீட் செய்துள்ள தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி “ பிரியமுள்ள சமந்தா, வாழ்க்கையில் அவ்வப்போது இதுபோன்ற சவால்கள் நமக்கு வரும். அவற்றின் மூலம் நம்மையே நாம் யார் என்று கண்டுணர முடியும்.
நீங்கள் ஒரு அற்புதமான மனவலிமை கொண்ட பெண். நீங்கள் இந்த கடினமான காலத்தையும் கடந்து வருவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்களுக்கு ஆற்றலும், தைரியமும் கிடைக்க விரும்புகிறேன்.” எனக் கூறி நம்பிக்கை அளித்துள்ளார்.
இயக்குனர் வம்சி உள்ளிட்ட பல தெலுங்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமந்தாவுக்கு இதுபோல ஆறுதலான வார்த்தைகளைக் கூறி வருகின்றனர்.