குழந்தைகளின் மீதான ஆட்கொணர்வு மனு!! உயர் நீதிமன்றம் தள்ளுபடி!!

0
255
Recruitment petition on children!! High Court Dismissal!!
Recruitment petition on children!! High Court Dismissal!!

குழந்தைகளின் மீதான ஆட்கொணர்வு மனு!! உயர் நீதிமன்றம் தள்ளுபடி!!

மதுரை உயர் நீதிமன்றத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஷாஜி என்ற பெண்மணி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நானும் என் கணவர் ஆனந்தும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு 1 ஆண் மற்றும் 1 பெண் என் இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது என் இரு குழந்தைகளையும் எனது கணவர் ஆனந்த் கடத்தி வைத்துள்ளார்.

என்னுடைய இரு குழந்தைகளையும், என் கணவரிடமிருந்து மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் விசாரித்தனர்.  பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரான ஷாஜிக்கும் அவரது கணவர் ஆனந்துக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். அதில் ஷாஜியின் மகனுக்கு 18 வயது ஆகிவிட்டது.

அதனால் மனுதாரர் இதை கடத்தல் என கூற முடியாது. ஆனால் பெண் குழந்தைக்கு 7 வயது ஆவதால், ஷாஜியின் கணவர் ஆனந்த் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றதாக  குற்றம் சாட்டியுள்ளார்.  மேலும் கணவன், மனைவி விவகாரத்தில் குழந்தைகளை அழைத்து சென்றதை ஆட்கொணர்வு மனுவாக விசாரிக்க முடியாது எனவும் இந்த வழக்கை குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி தீர்த்துக் கொள்ளலாம் என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Previous articleலியோ படத்தில் இவரும் நடிக்கிறாரா? அவரே வெளியிட்ட அறிவிப்பு!!
Next articleவிஜயின் அடுத்த பட ஹீரோயின்!! தேர்வு செய்த வெங்கட் பிரபு!!