தமிழ்நாட்டின் தலைநகரமாக சென்னை இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் அதாவது டிசம்பர் மாதம் வெள்ளம் சூழ்ந்த சென்னையாக மாறுவது வழக்கமாகி விட்டது. ஆனால் இந்த முறை முன்னதாகவே இந்த மாதம் அக்டோபர் (15,16,17) ஆகிய தினகங்களிலையே கன மழை எச்சரிக்கை (ரெட் அலெர்ட் ) விடுக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காரணமாக டிசம்பர் மாதம் சென்னையில் மழை வெளுத்து வாங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முன்னரே அக்டோபர் மாதம் 15-ம் இன்று சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதனை தொடர்ந்து வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில் இது வெறும் ட்ரைலர் தான் இனி தான் ஆட்டம் ஆரம்பம் என்ற வகையில், இனி வரும் நான்கு நாட்களுக்கு இதை விட அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்போதே பல இடங்களில் தண்ணீர் தேங்க ஆரம்பித்து விட்டது இன்னும் கன மழையை எப்படி சந்திக்க போகிறோம் என்று சென்னை மக்கள் தவித்து வருகின்றனர்.
இது குறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் இன்று 15-ம் தேதி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்துள்ளார். மென்பொருள் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். நடை மேடை கடைக்காரர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவார்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பிற்காக கவனத்துடன் செயல்படுமாறும் கூறியுள்ளார்.
நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் வெள்ள அபாயம் காரணமாக வேளச்சேரி மற்றும் பள்ளிகரணை பாலத்தின் மீது தங்களது வாகனங்களை பாதுகாப்பிற்காக நிறுத்தி உள்ளனர். தமிழகத்தில் சென்னை அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் மிக கன மழையும் மேலும் மாற்ற மாவட்டங்களில் கன மழையும் சில மாவட்டாங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.