காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பேன் இந்தியா விநியோக நிறுவனமாக மாறும் ரெட் ஜெயண்ட் மூவீஸ்?

0
234

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பேன் இந்தியா விநியோக நிறுவனமாக மாறும் ரெட் ஜெயண்ட் மூவீஸ்?

உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியாகும் முன்னணிக் கலைஞர்களின் படங்களை ரிலீஸ் செய்து வருகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த ஒரு ஆண்டில் ரிலீஸான அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம், விக்ரம், கோப்ரா, டான் உள்ளிட்ட ஏராளமான படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தான் ரிலீஸ் செய்துள்ளது. ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லா படங்களையும் வாங்குவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் அவர்களையே நாடி செல்வதாகவும், பட வியாபார கணக்குகளை அவர்கள் சரியாகக் கொடுப்பதாகவும் ஆதரவாகவும் சொல்லப்படுகிறது.

அதுவும் அவர்கள் படங்களை விலை கொடுத்து வாங்கி ரிலீஸ் செய்வது இல்லை, கமிஷன் அடிப்படையில் மட்டுமே ரிலீஸ் செய்வதால் அவர்களுக்கு படம் ஓடவில்லை என்றாலும் நஷ்டம் வராது. இதனால் கடந்த ஒரு ஆண்டில் விஸ்வரூப வளர்ச்சியோடு இருக்கிறது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்.

இந்நிலையில் இப்போது அந்நிறுவனம் தமிழ்நாடு தாண்டியும் கேரளா மற்றும் கர்நாடகா சினிமாவில் காலூன்ற முடிவு செய்து அங்கும் கிளை நிறுவனங்களை திறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இனிமே தங்கள் ரிலீஸ்களை அந்த மாநிலங்களிலும் தங்கள் நிறுவனம் மூலமாகவே செய்ய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் பேன் இந்தியா ரிலீஸ் நிறுவனமாக வளரத் தொடங்கியுள்ளது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்.

Previous articleஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!
Next articleசாலையில் பறந்த கார்! அதிமுக பிரமுகர்கள் உயிரிழப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here