வாரிசு படத்தின் உரிமையையும் கைப்பற்றியது ரெட்ஜெயண்ட் !! ஒரே களத்தில் இறங்கும் தல தளபதி!
இளைய தளபதி விஜய் நடித்த வாரிசு படத்தின் வெளியிடும் உரிமையை ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.நடிகர் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வாரிசு.
விஜய்-யின் 66 வது படமான வாரிசு ஐதராபாத்தை தலைமையாக கொண்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு பொங்கல் பரிசாக திரைக்கு வர இருக்கிறது. இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட இருக்கிறது.
இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ்,சரத் குமார், பிரபு, யோகிபாபு ,குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே நடிக்கும் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி கிருஷ்ணா இயக்க, தமன் இசையமைக்கிறார்.
முழுக்க முழுக்க சென்டிமென்ட் கொண்ட இந்த படம் குடும்ப கதையை அடிப்படையாக
கொண்டது.இதனை அடுத்து இந்த படத்தின் வெளியீட்டு விநியோக முறையை, உதயநிதியின்
ரெட் ஜெயன்ட் மூவீஸ் பட தயாரிப்பு நிறுவனம் வாங்க முயற்சி செய்த நிலையில் வாரிசு பட
நிறுவனம் அதனை மறுத்து செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்திடம் பட வெளியீடு
உரிமையை அளித்தது.
எனவே ரெட் ஜெயன்ட் மூவீஸ் துணிவு படத்தின் விநியோக உரிமையை பெற்று இருந்தது.இதனால் விஜய்-உதயநிதி இடையே மறைமுக மோதல் நிலவுவதாக கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று வெளிவந்த அறிவிப்பின் படி வாரிசு படத்தின் உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தெரிய வந்துள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, செங்கல்பட்டு,கோவை, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் திரைப்படத்தை வெளியீடும் உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வாங்கி இருக்கிறது. இதனை வாரிசு பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம்ப ஏற்கனவே துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை
தமிழகம் முழுவதிலும் பெற்று இருந்தது என்பதும் , தற்போது வாரிசு படத்தின் உரிமையையும்
வாங்கி பொங்கலுக்கு தல, தளபதிகளின் திரைப்படங்களை ரீலீஸ் செய்கிறது.இதனால் வாரிசு படத்தின் வெளியீடு தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.