விவசாயிகளுக்கவே குளிர்சாதன வசதி கொண்ட ரயில்சேவை நாளை தொடக்கம்: எங்கிருந்து எதுவரை? சலுகைகள் என்ன?

Photo of author

By Parthipan K

கிஷான் ரயில் சேவை விவசாயிகளுக்காக குளிர்சாதனப் பெட்டி பொருத்தப்பட்ட ரயில் சேவையை வழங்கவுள்ளதாக இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தனது நிதி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

 

அதில், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களில், விரைவில் கெட்டுப் போகக்கூடிய பொருட்களை கொண்டு செல்வதற்காக கோல்ட் சப்ளை செயின் எனும் திட்டத்தின்படி உருவாக்கும் முயற்சியாக, தனியார் துறையுடன் இணைந்து கிசான் ரயில்வே சேவை வழங்கப்படுமென அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

 

 

அதனடிப்படையில், தற்போது ரயில்வே அமைச்சகம் விவசாயிகளுக்காக குளிர்சாதனம் பொருத்தப்பட்ட சரக்கு ரயில் சேவையினை, மகாராஷ்டிராவின் தேவ்லாலியில் இருந்து பீகாரின் தனபூர் வரை ஆகஸ்ட் 7 அதாவது நாளை காலை 11 மணி அளவில் இயக்கப்படுவதாக ரயில்வே துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ரயில் சேவையானது, இடையில் நாசிக் சாலை, மன்மத், ஜல்கான், புசாவல், புர்ஹான் பூர், கான்பூர், காண்ட்வா, இடர்சி, ஜபல்பூர், சட்னா, கட்னி, மணிப்பூர், ப்ராக்கியராஜ் சியோகி, பண்டிட் தீனதயாள் உபாதியாய் நகர் மற்றும் பக்சர் ஆகிய இடங்களில் நின்று செல்லும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

 

மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் முதல் குளிர்சாதன சரக்கு ரயிலை காணொளி காட்சியின் மூலம் கொடியசைத்து துவக்கி வைப்பார்.

 

விவரங்கள்

  • இந்த சரக்கு ரயில்கள் நவீன வசதியுடன் 17 டன் கொள்ளளவு உள்ள பெட்டிகள் கொண்டது.

 

  • இந்தியாவில் தற்போது வரை 9 குளிரூட்டப்பட்ட சரக்கு ரயில் பெட்டிகள் இருக்கின்றன.

 

  • இதில் கட்டணமாக சாதாரண சரக்கு ரயில் கட்டணத்தை விட ஒன்றரை மடங்கு அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளது.