நோய்த் தொற்று குறைந்திருப்பதால் இனி கட்டுப்பாடுகள் அவசியமில்லை! மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

0
38

கடந்த 2019ஆம் வருடம் சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல, உலகம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலும், பிரதேசங்களிலும், பரவி அதீத பாதிப்பை ஏற்படுத்தியது.அதிலும் உலக வல்லரசாக திகழக்கூடிய அமெரிக்காவை வெகுவாக இந்த நோய்த்தொற்று பாதித்தது.முதலில் இதயநோய் தொற்று பாதிப்பில் முதலிடத்திலிருந்த சீனா தற்போது அந்தப் பட்டியலிலில்லை.

இந்த நோய்த்தொற்று பரவல் சீனாவின் ஆய்வகத்திலிருந்து தான் பரவியது என்று சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அதோடு சீனாவின் மீது உலக நாடுகள் அனைத்தும் கடுமையான கோபத்தில் இருந்து வருகிறார்கள்.

தற்போது இந்த நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல, குறையத் தொடங்கி வருகிறது. அதற்கு காரணம் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டது தான் என்றும் சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கள் மூலமாக கோடிக்கணக்கான நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன.

இந்தநிலையில், நோய்த்தொற்று பரவலின் 3வது அலை இறுதிகட்டத்தை நெருங்கியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. இந்த தருணத்தில் டெல்லியில் நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் நேற்று பத்திரிக்கையாளர்களும் சில விஷயங்களை தெரிவித்திருக்கிறார்கள்.

அதாவது நாட்டில் 15 முதல் 18 வயது வரையிலான நபர்களில் 64 சதவீதத்தை சார்ந்தவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். 39 சதவீதத்தினர் 2வது தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கி வேகமாக எல்லோருக்கும் செலுத்தி ஏற்றுக்கொள்ள செய்த காரணத்தால், நாட்டில் நோய்தொற்று உயிரிழப்புகள் குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நோய் தொற்றால் உண்டாகும் இழப்பைத் தடுப்பதில் தடுப்பூசிகள் 98.9% பயனுள்ளதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்கின்ற போது அது மரணத்திற்கு எதிராக 99.3 சதவீதம் பாதுகாப்பானதாக இருக்கிறது.

நோய்த்தொற்றின் சமீபத்திய எழுச்சியை திறம்பட கட்டுப்படுத்த உதவியது சுகாதார பாதுகாப்பு, முன் களப் பணியாளர்களின் உழைப்பு மற்றும் தடுப்பூசிகள் தான் என்று தெரிவிக்கப்படுகிறது.

தற்சமயம் தடுப்பூசிகள் காரணமாக, நோய்தொற்று குறைந்து விட்ட சூழ்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், ஓய்வு விடுதிகள், பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கலாம். வழக்கமான செயல்பாடுகளை ஆரம்பிக்கலாம் ஆனாலும் கவனமாகவும், விழிப்புணர்வுடனும், இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நாட்டின் 29 மாவட்டங்களில் நோய்தொற்று பாதிப்பின் விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறது. 34 மாவட்டங்களில் 5 முதல் 10 சதவீதமாக இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.