“ரோட்டில் வைத்து மொத்த கோபத்தையும் கொட்டிய நடிகை…” சிக்கிய பயில்வான் ரங்கநாதன்!

Photo of author

By Vinoth

“ரோட்டில் வைத்து மொத்த கோபத்தையும் காட்டிய நடிகை…” சிக்கிய பயில்வான் ரங்கநாதன்!

பயில்வான் ரங்கநாதனை சாலையில் வைத்து திட்டி தீர்த்துள்ளார் நடிகை ரேகா நாயர்.

பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் படம் முழுவதும் ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் நான்லீனியர் பாணியில் அமைந்த திரைக்கதையை சிங்கிள் ஷாட்டில் படமாக்கியுள்ளார். உலகிலேயே இந்த வகையில் அமைந்த முதல் திரைப்படம் இதுதான். இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அதில் அவர் இறந்துவிட அதையறியாத அவரின் குழந்தை பால் குடிக்க அவரின் மார்பை கடிப்பது போல காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த காட்சிக்கு பரவலான பாராட்டுகள் கிடைத்துள்ளன. ஆனால் தனது வாய்த்துடுக்கான கருத்துகளால் சர்ச்சைகளைக் கிளப்பிவரும் பயில்வான் ரங்கநாதன் நடிகை ரேகா நாயர் பற்றி பேசும் ஒரு காணொளியில் அவரை மோசமாகவும், ஆபாசமாகவும் சித்தரித்து பேசி இருந்தார்.

இதையடுத்து சமீபத்தில் பயில்வானை வாக்கிங் செல்லும் வழியுல் எதேச்சையாக சந்தித்த ரேகா தன் மொத்த கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அதில் “என்னப் பத்தி பேசினால் செருப்பு பிஞ்சிடும். நான் என்ன ஒன் பொண்டாட்டியா இல்ல மகளா? எதுக்கு என்ன பத்தி பேசுற… “ எனக் கோபத்தில் கொந்தளித்துள்ளார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிகளவில் கவனம் பெற்றுள்ளது. இதையடுத்து நடிகைக்கு ஆதரவாகவும் பயில்வானுக்கு கண்டனங்களை தெரிவித்தும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.