நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணமானது கோலகாலமாக நடைபெற்று இருந்தது. இரண்டு வருடங்களுக்குப் பின் டாக்குமென்ட்ரியாக தான் கடந்து வந்த பாதையை நயன்தாரா, ” Nayanthara: beyond the fairy tale” என்ற ஆவணப் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட பட காட்சிகள் வந்துள்ளதாக, அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் நயன்தாரா மீது 10 கோடி கேட்டு வழக்கு பதிவு செய்திருந்தார். அதன் பின் நயன்தாரா படப்பிடிப்பின் மூன்று நிமிட காட்சிகள் வந்ததற்காக 10 கோடியா! என பல்வேறு விதமாக எதிர்ப்பை காட்டி வந்தார். நயன்தாராவின் கேள்விகளுக்கு தனுஷ் பதில் அளிக்கவில்லை. எனினும், தனுஷின் ரசிகர்கள் மூன்று நிமிட விளம்பரத்தில் இலவசமாக நடித்துக் கொடுப்பீர்களா?என நயன்தாராவை கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த பிரச்சனையே முடியாத நிலையில், அந்த ஆவணப் படத்திற்காக மேலும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அதன்படி சந்திரமுகி திரைப்படப் குழுவினர், எங்கள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகள் இந்த ஆவண படத்தில் இணைந்துள்ளன என வழக்கு தொடுத்துள்ளது. இதற்கு நஷ்ட ஈடாக 5 கோடி கேட்கிறது சந்திரமுகி படக்குழு. இதைத் தெரிந்து கொண்ட நெட்டிஷன்கள் மீண்டும் மீண்டுமா? என பதிவிட்டு வருகின்றனர்.