சமீபத்தில் விஜய் தேவர் கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து உணவு அருந்துவது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் பல விதமான கேள்விகளை எழுப்புவதுடன் அவர்கள் இருவருக்கும் இடையில் என்னவென்று கிசுகிசுத்தம் வருகின்றனர்.
இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், இன்று வரையில் இவர்களுடைய காதலை வெளிப்படுத்தவில்லை எனவும் சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.குறிப்பாக இருவரும் தனித்தனியாக படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியே விடும்போது, இரண்டும் ஒரே இடம் தான் என அதைப் பார்த்த பலர் தங்களுடைய கருத்துக்களையும் பதிவிடுகின்றனர்.
சமீபத்தில், விஜய் தேவரகொண்டா ஒரு நிகழ்ச்சியில் தான் சிங்கிளாக 35 வயது வரை எப்படி இருக்க முடியும் எனப்பதில் சொல்லி தான் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை சூசகமாக தெரிவித்தார்.
மேலும், இவர் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்த சில நாட்களுக்குள், அவர் ராஷ்மிகா மந்தனாவுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படங்கள் வெளிவந்து வைரல் ஆகியுள்ளன.அதில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஒருவரை ஒருவர் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், ஒரு உணவகத்தில் ஒன்றாக மதிய உணவு உணவருந்தியுள்ளனர். விஜய் மற்றும் ராஷ்மிகாவின் மதிய உணவு டேட்டிங் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.