தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவில் கடந்த 18 மாத காலமாக கட்டுப்பாடுகள் மற்றும் செலவுகள் என்று அறிவிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
தற்சமயம் கோவில் திருவிழாக்கள், அரசியல் மற்றும் சமூகம் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடைகள் விதிக்கப் பட்டு இருக்கின்ற நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.
எதிர்வரும் 31ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு உத்தரவு நிறைவுபெற இருக்கின்ற சூழ்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் இன்றையதினம் ஆலோசனை நடத்தினார். சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்கள்.
அண்மைக் காலமாக மறுபடியும் தமிழகத்தில் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது, செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருநாளைக்கு ஏறத்தாழ 250 இற்கும் அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆகவே இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நோய் பரவலை மூன்றாவது அலையை தடுக்கும் விதத்தில் பாதிப்பு அதிகமாக இருக்கின்ற மாவட்டங்களில் என்னென்ன கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
அத்துடன் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாகவும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது