பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படாது! தமிழக பள்ளிக்கல்வித்துறை!

Photo of author

By Sakthi

கொரோனா காரணமாக, தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாக, அந்த வகுப்புகளை சார்ந்த மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறவில்லை. இருந்தாலும் பொதுத்தேர்வு வரவிருப்பதால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த அறிவுறுத்தலின்படி மே மாதம் மூன்றாம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஆரம்பிக்க இருக்கிறது. இதற்கிடையில் தொற்று வேகமாக பரவி வருவதால் தேர்வு ரத்தாகுமா என்ற கேள்வி எழ தொடங்கியிருக்கிறது.இருந்தாலும் வைரஸ் பரவல் இருந்தாலும்கூட பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் எதுவும் ரத்து செய்ய கூடாது என்று தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்விற்கு மிகக் குறைந்த காலமே இருக்கும் காரணத்தால், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன .

இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுடைய செய்முறைத் தேர்வுக்கான நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் என்னவென்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி எல்லோரும் கட்டாயமாக முக கவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியுடன் இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அனைத்து மாணவ மாணவிகளும் குடிநீர் பாட்டில்கள் மற்றும் கிருமிநாசினி போன்றவற்றை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சனிடைசர் பயன்படுத்திய பின்னர் தீ சம்பந்தப்பட்ட பொருட்கள் எதுவும் உபயோகப்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. காற்றோட்டமாக இருப்பதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்பவை போன்ற இருபத்தியோரு வகையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருக்கிறது.