தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது!

Photo of author

By Parthipan K

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது!

சில மாதங்களுக்கு முன்பு சிம்பு நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம்தான் மாநாடு. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

சிம்புவின் மாநாடு திரைப்படம் அறிவித்த தேதியில் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. இதனால் அறிவித்த தேதியில் இந்த படம் வெளியாகுமா? என்கிற சந்தேகம் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் உருவானது. எனினும், ஒருவழியாக அறிவித்த தேதியில் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல  வரவேற்பை பெற்று வசூலிலும் வாரி குவித்தது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் தந்தை தன்னுடைய சுரேஷ் புரொடக்சன்ஸ் மூலம் மாநாடு திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் மற்றும் பிற மொழியில் ரீமேக் செய்வதற்கான உரிமத்தை பெற்றிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மாநாடு திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கு ரீமேக்கையும் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடு திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாகசைதன்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், நடிகை பூஜா ஹெக்டேவும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.