இவர்களுக்கு தலா ரூ10000 நிவாரணம்! முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

Photo of author

By Rupa

இவர்களுக்கு தலா ரூ10000 நிவாரணம்! முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மாண்டஸ் என்ற புயல் உருவாகி வரலாறு காணாத மழையா கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் பெருமளவு வெள்ளம் சூழ்ந்தது.

குறிப்பாக பயிரிட்ட விவசாயிகள் வெள்ளத்தால் பயிர்கள் இழந்து மிகவும் வருந்தினர். அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டு அமைச்சர் மற்றும் முதல்வர் உள்ளிட்டோர்கள் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினர்.மேற்கொண்டு அவர்களுக்கு பயிர்க்கு இணையான நிவாரண தொகையை வழங்க வேண்டும் என்று பல கட்சிகள் வலியுறுத்தி வந்தது.

அந்த வகையில் வரலாறு காணாத மழையால் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 32, 533.4630 ஹெக்டர் அளவில் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுத்து அதற்குரிய நிவாரண தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

அந்தவகையில் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் விவசாயிகளுக்கு இடுப்பொருள் நிவாரணம் தலா ரூ.10000 என்ற அடிப்படையில் மொத்தம் 43,92,01,750 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அதனை அடுத்ததாக கடலூர், திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 28 மாவட்டங்களிலும் பயிர் சேதம் அடைந்துள்ளதால் அங்கு பாதிக்கப்பட்ட 8,562 விவசாயிகளுக்கும் இடுப்பொருள் நிவாரணமாக மொத்தம் ரூ.6,96,82,473 தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.

பயிர் சேதம் அடைந்ததற்கு குறித்து ஆவணங்கள் திரட்டப்படும் நிலையில் மேற்கொண்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் அரசாணை வெளியிட்டுள்ளார்.ஆனால் இந்த தொகை விவசாயிகளுக்கு ஈடு செய்யும் விதத்தில் இருப்பது சந்தேகமே.