செல்வத்தை அள்ளித் தரும் குபேரரை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது தெரியுமா?

Photo of author

By Kowsalya

எவ்வளவுதான் நம்மிடம் சொத்துக்கள் பணம், காசுகள் என குவிந்து கிடந்தாலும் குபேர பொம்மையை வாங்கி அனைவரும் வைத்திருப்பார்கள் காரணம் அவர் செல்வத்தை அள்ளித் தரும் கடவுள். அதே போல் இருக்கும் செல்வம் நம் கைவிட்டுப் போகக் கூடாது என்பதற்காகவும் குபேர சிலையை வீட்டில் வைத்திருப்பார்கள். அந்த சிலை எந்த திசையை நோக்கி இருந்தால் நமக்கு செல்வமும் அதிகரிக்கும், இருக்கின்ற சொத்துக்களும் வீட்டிலிருந்து போகாமல் இருக்கும் என்பதை பற்றி தான் இந்த பதிவு.

அகில உலகம் அனைத்திற்கும் செல்வத்தின் அதிபதியான திரு மகாலட்சுமி அந்த செல்வத்தை பாதுகாக்கும் பொருட்டு அந்தப் பணியை குபேரரிடம் ஒப்படைத்துள்ளார். அதனால் நாம் வணங்கும் பொழுது குபேரரையும் சரி மகாலட்சுமியும் சரி சேர்ந்து வணங்கவேண்டும்.

அனைத்து கடவுள்களின் உருவப் படங்களும் கிழக்கை பார்த்து தான் வைக்க வேண்டும் என்பதே ஐதீகம். அதேபோல சிலையையும் அதுவும் சிரித்துக் கொண்டிருக்கும் குபேர சிலையையும் கிழக்கு பார்த்து வைக்க வேண்டும். அப்படி வைத்தால் நம் வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் சந்தோஷங்களும் மனநிம்மதி வந்தடையும்.

குபேர சிலையை நீங்கள் வீட்டிற்குள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைக்கலாம் ஹால், படுக்கையறை, உணவருந்தும் அறை எங்கு வேண்டுமானாலும் வைத்து வணங்கலாம். இப்படி கிழக்கு பார்த்து சிரிக்கும் குபேர சிலையை நம் வீட்டில் வைத்திருந்தால் நேர்மறை எண்ணங்கள் மேலோங்கி எதிர்மறை எண்ணங்களை அழித்து விடும். வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் ஓடிப்போய்விடும். செல்வம் வீட்டிற்கு தேடி வரும்.

அதேபோல் தென்கிழக்கு திசையை நோக்கி குபேரன் சிலையை வைக்கும் பொழுது எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். மேலும் அதிக வருமானமும் கிடைக்கும்.

நீங்கள் மேற்கொள்ளும் வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் எனில் குபேரருக்கு பால் அபிஷேகம் செய்து சிவப்பு நிறப் பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். திருவண்ணாமலையில் நீங்கள் கிரிவலம் செல்ல நேரும் பொழுது குபேர லிங்கத்தை வணங்கி வாருங்கள் செல்வம் கொட்டும்.

குபேரருக்கு வியாழக்கிழமை என்பது அதிர்ஷ்டமான நாள். அதுவும் பூச நட்சத்திரத்தில் வரும் வியாழக்கிழமை மிகவும் சிறந்தது. அந்த நேரத்தில் குபேரனை வழிபடும் பொழுது அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்குமாம்.

ஏலக்காய் கிராம்பு அங்கே வாசனைப் பொருட்கள் மிகுந்த பால், வெல்லம் சர்க்கரை ஆகிய இனிப்புப் பொருட்களும் குபேரனுக்கு மிகவும் பிடித்த நெய்வேத்தியமாக கருதப்படுகிறது.

 

எனவே எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை அறிந்து அந்த திசையில் வைத்துக்கொள்ளுங்கள். கிழக்கு மற்றும் தென்கிழக்கு குபேரன் சிலை வைப்பதற்கு மிகவும் சிறந்த திசையாக கருதப்படுகிறது.