நாம் ஒவ்வொரு நாளும் நமக்கே தெரியாமல் ஏதாவது ஒரு பாவத்தை செய்து விடுகிறோம். அது நன்மையோ தீமையோ நமது கணக்கில் எழுதப்பட்டு விடுகிறது. பாவக் கணக்கில் சேர்ந்து கொண்டே தான் போகின்றது தவிர அது தீர்ந்தபாடில்லை. கங்கையில் குளிக்க சர்வ பாவமும் நீரோடு சேர்ந்து போகும் என்பது ஐதீகம். கங்கையில் நீராடி ஒருசில மந்திரத்தை சொல்வதன் மூலம் கங்கையில் குளித்த பலன் கிடைத்து பாவம் அனைத்தும் நீங்கும் மந்திரத்தை தான் இப்பொழுது நாம் பார்க்கப் போகின்றோம்.
சிவனின் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கை தேவி மனிதர்களின் அனைத்து பாவங்களையும் சுமந்து அதை நீக்கி விடுகிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
மந்திரம்:
ஓம் நம சிவாயை நாராயண்யை தச தோஷஹராயை கங்காயை சுவாஹா!
கங்கையில் நீராடிய பலன் கிடைக்க அருள் பொங்கும் இந்த மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது சாஸ்திரம்.