ஆரம்பிப்பதற்கு முன்னரே அலப்பறை! திமுகவினரின் பேராசை!

Photo of author

By Sakthi

தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறாத ஒரு சூழ்நிலையில் திமுகவைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் எல்லோரும் தற்போது அமைச்சர் கனவில் மிதந்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது அதன்படி கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர் திமுகவின் தமிழரசி ஆனாலும் அவர் வெற்றியடைந்துவிட்டால் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காது என்று நினைத்த மாவட்ட செயலாளர் மூர்த்தி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் தமிழரசியை போட்டியிட வைத்தார்.

ஆனால் சிவகங்கை தொகுதியிலும் தமிழரசி அமைச்சர் பொறுப்பேற்கு வந்துவிட்டால் தனக்கான வாய்ப்பு தடைபட்டுவிடும் என்று பதறிப்போனார் திமுகவின் மாவட்ட செயலாளர் கே ஆர் பெரிய கருப்பன் விளைவு திமுகவினரே தமிழரசி அவர்களை தோற்கடித்து விட்டார்கள். அடுத்த தேர்தலிலும் மானாமதுரை தனக்கு கிடைத்துவிடும் என்று நினைத்திருந்தார் தமிழரசி இருந்தாலும் அறிமுகமே அல்லாத முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் மகளை மானாமதுரையில் களமிறங்கினார்கள்.

ஆனால் மானாமதுரை அதிமுக கைப்பற்றி வென்றது இந்தமுறை கனிமொழியின் கருணையின் காரணமாக மறுபடியும் மானாமதுரையில் களம் காண இருக்கிறார் தமிழரசி முதுகுளத்தூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் ராஜகண்ணப்பன் வெற்றி பெற்றால் நிச்சயமாக அமைச்சர் பொறுப்பிற்கு வந்து விடுவார் என்று சொல்கிறார்கள் அதேபோல தமிழரசியும் வெற்றிபெற்றால் அமைச்சர் பதவி உண்டு என்று சொல்லப்படுகிறது.கடந்த 2006 மற்றும் 2011 2016 தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக இருந்து வருகிறார் கே ஆர் பெரியகருப்பன் கடந்த 2006 முதல் 2011 ஆண்டு வரையில் அமைச்சராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார்.

இந்த நிலையில், நான்காவது முறையாக அவருக்கே மறுபடியும் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. பெரிய கருப்பன் கடவுள் பக்தி மிகுந்தவர் சமீபத்தில்தான் தன்னுடைய குலதெய்வமான வேலங்குடியில் இருக்கின்ற சாம்பிராணி கருப்பசாமி கோவிலுக்குச் சென்று அருள்வாக்கு கேட்டு இருக்கின்றார்.

 

அங்கே அருள்வாக்கு தெரிவித்த பூசாரி 75 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் நீ வெற்றி பெறுவாய் மீண்டும் அமைச்சராக வலம் வருவாய் என்று தெரிவித்திருக்கிறார். அதனை கேட்டதிலிருந்து பெரியகருப்பன் தன்னை அமைச்சராகவே எண்ணிக்கொண்டு இருக்கிறாராம் 2011ஆம் ஆண்டு தமிழரசிக்கு என்ன நிலை ஏற்பட்டதோ அதே நிலை தான் இப்பொழுது ராஜகண்ணப்பனால் பெரிய கருப்பனுக்கு ஏற்படப்போகிறது என்று சொல்கிறார்கள்.