வாட்டும் வெயில் – நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

Photo of author

By Hasini

வாட்டும் வெயில் – நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் போர்கால அடிப்படையில் மத்திய அரசு கொரோனா தடுப்பூசியாக ரெம்டேசிவேர் மற்றும் கொவிட்ஷீல்டு மருந்துகளை பரிந்துரைக்கிறது.எனவே அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநில மக்கள் நலனிற்காக எவ்வளவு எண்ணிக்கை வேண்டுமோ அதை பரிந்துரை செய்து கொண்டிருக்கும் நேரத்தில், தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரெம்டடிசிவர் மருந்தினை விற்பனை செய்து வருகிறது.மருந்துகளை விற்பனை செய்ய இரண்டு சிறப்பு கவுண்டர்கள் செயல்படுகிறது.காலை 10 மணி முதல் 5 மணி வரை மருந்துகளை பெறலாம் என அறிவித்துள்ளது.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் ரெம்டடிசிவேர் வாங்க நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.நாள் ஒன்றுக்கு 5௦௦ டோக்கன் வரை தரப்படுவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.மருந்து பற்றாக்குறையின் காரணமாக அனைவருக்கும் மருந்து சென்று சேர்வதில் தாமதம் ஏற்படுகிறது.இதன் காரணமாக முதல் நாள் இரவிலிருந்தே மக்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்துவிடுகின்றனர்.தங்கள் உறவினர்களை காக்க உறக்கம் இல்லாமலும், கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் முதலிடம் பிடிக்க மக்கள் அவதிபடுகின்றனர்.நாம் கஷ்டப்பட்டாலும் நாம் குடும்ப உறுப்பினர்களை எப்படியும் காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில்.

ஒரு நாளில் டோக்கன் பெற்றவர்களில் மருந்து வாங்கியவர்களை தவிர பிறருக்கு அடுத்த நாளில் முன்னுரிமை வழங்கி ரெம்டிசிவேர் வழங்கப்படுவதாகவும் சொல்கின்றனர்.டோக்கன் முறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.மருந்து வாங்கிய பின்பும் சிலர் பொதுமக்களோடு கலந்து மறுபடியும் மருந்துகளை வாங்குவதாக தெரிவிக்கின்றனர்.மேலும் சில மோசடி பேர்வழிகள் அடுத்த நாள் வரிசையில் நிற்கும் மக்களிடம் அதிக விலைக்கு அதே டோக்கன் ஐ விற்று செல்வதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.அந்த ஆசாமிகள் ரெம்டிசிவேர் மருந்தினை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பதாகவும் பல்வேறு தரப்பில் புகார்கள் தெரிவிக்கின்றனர்.அதை தடுக்க அரசு முறையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.அந்த வகையில் ஏழாவது நாளாக ரெம்டிசிவர் வாங்க ஏராளமான மக்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடையுடன் நீண்ட வரிசையில் நின்று மருந்தைப் பெற்று செல்கின்றனர்.

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மிகப்பெரிய வளாகம்.பெண்கள் கூறுகையில் உட்காருவதற்கு கூட இடம் இல்லாமலும்,வெயிலில் நாள் முழுவதும் நிற்பதால் உடல் சோர்வாகிறது என்றும், பலர் மயக்கம் அடைந்து விடுவதாகவும் கூறுகின்றனர்.மருத்துவமனை வளாகத்தின் உள்ளே உட்கார வைக்கவில்லை என்றாலும் நிற்பதற்கு ஒரு நிழற்கூடையாவது அமைக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு ஒரு கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.ரெம்டடிசிவேர் மருந்து விற்பனையை அந்தந்த மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தொடங்க வேண்டும் என்றும்,அவ்வாறு செய்யும் பட்சத்தில் பொது மக்கள் இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க நேராது எனவும் பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.