வறுமை நீங்கி உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய இதை நீரில் கரைத்து இப்படி பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Divya

வறுமை நீங்கி உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய இதை நீரில் கரைத்து இப்படி பயன்படுத்துங்கள்!!

நம் வாழ்வில் இருக்கும் பெரிய கஷ்டம் பணக் கஷ்டம் தான்.எவ்வளவு சம்பாதித்தாலும் பண பிரச்சனை மட்டும் தீர்ந்த பாடில்லை.பணம் இருந்தால் எதையும் சுலபமாக சமாளித்து விடலாம்.

சந்தோசமாக வாழ்க்கையை அனுபவிக்க பணம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.ஆனால் பெரும்பாலானோர் வாழக்கை முழுவதும் வறுமையை சந்திக்கின்றனர்.

இந்த நிலை மாறி பணத் தேவை பூர்த்தி அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செவ்வாய் அன்று செய்து வர வேண்டும்.

காரணம் செவ்வாய் பண கஷ்டங்களை போக்க கூடிய நாளாக உள்ளது.வாங்கிய கடனை செவ்வாய் அன்று திருப்பி கொடுத்தால் திரும்ப கடன் வாங்கும் சூழல் ஒருபோதும் ஏற்படாது.

செவ்வாய் அன்று காலை அல்லது மாலை அன்று ஒரு பரிகாரம் செய்தால் நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கும் பண வரவு வந்து சேரும்.

ஒரு செம்பில் பன்னீர் நிரப்பி அதில் ஒரு துண்டு பச்சை கற்பூரம்,இரண்டு ஏலக்காய், ஒரு துண்டு வசம்பு,ஒரு செவ்வரளி பூ போட்டுக் கொள்ளவும்.இதை வீட்டு பூஜை அறையில் முருகன் படத்திற்கு முன் வைக்கவும்.பிறகு வறுமை நீங்கி பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.பிறகு இந்த தீர்த்த நீரை உங்கள் வீட்டு பீரோ,பண பெட்டி என்று பணம் வைக்கின்ற இடத்தில் தெளித்து விடவும்.இவ்வாறு செவ்வாய் அன்று தொடர்ந்து செய்து வந்தால் பண வரவு அதிகரிக்கத் தொடங்கும்.