TVK: தமிழக வெற்றிக் கழக கொடியிலுள்ள யானை சின்னத்தை நீக்குமாறு பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் அவர்கள் கடந்த ஒரு வாரம் முன்பு தனது கட்சிக்கொடி மற்றும் பாட்டு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது பனையூர் அலுவலகத்தில் வெளியிட்டார். இவரது கட்சி கொடியானது சிகப்பு மற்றும் மஞ்சள் நிறம் கொண்டதாக உள்ளது. மேலும் இதில் இரண்டு போர் யானைகள் மற்றும் வாகை பூவும் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பூ, யானை உள்ளிட்ட அனைத்தும் குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வந்தனர்.
குறிப்பாக முத்துட் பைனான்ஸ் மற்றும் பெவிகால் விளம்பரத்தை அப்படியே காப்பி அடித்து தனது சின்னத்தை தயார் செய்ததாகவும், இது வாகை பூ இல்லை இதற்கு தூங்கும் பூ என்று அர்த்தம் எனவும் பலர் கூறி வந்தனர். இதனையெல்லாம் கடந்து வந்த விஜய் தற்பொழுது அரசியல் கட்சியுடன் சின்னத்திற்காக மோதும் நிலை-க்கு தள்ளப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் யானை இருப்பதால் பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்படும் என்றும் இதனால் விஜய் அவர்கள் தனது கட்சி கொடியில் உள்ள யானையை நீக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.
மேற்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் கூறுவதாவது, திரை சினிமா உலகில் டூப் போடுவது போல அரசியல் சின்னங்களில் போட முடியாது. மூன்றாம் வகுப்பு பாடத்தில் உள்ள யானை போல அனைவரும் இதனை ஒரு மாதிரியாக பயன்படுத்த முடியாது. இதெல்லாம் முத்தூட் பைனான்ஸ், ஃபெவிகால் விளம்பரங்களுக்கு சரியாக இருக்கும். ஆனால் அரசியலுக்கு இது உகந்ததல்ல, எனவே விஜய் தவெக கட்சி கொடியிலிருந்து யானை படத்தை நீக்காவிட்டால் கட்டாயம் போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் தேர்தல் ஆணைய விதிப்படி ஒரு கட்சியின் சின்னத்தை மற்றொரு கட்சி பயன்படுத்தக் கூடாதே தவிர அதனை கொடியில் பயன்படுத்துவது குறித்து எந்த ஒரு விதிமுறைகளும் வரையறுக்கவில்லை. தற்பொழுது தவெக மற்றும் பகுஜன் சமாஜ் கிடையே ஏற்பட்ட இந்த மோதலால் புதுவித விதிமுறைகள் நிறுவப்படலாம் என கூறுகின்றனர். மேற்கொண்டு இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அவ்வாறு கூறும் பட்சத்தில் விஜய் அவர்கள் கட்சிக் கொடியில் யானை இருக்குமா இருக்காதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.