15 ஆண்டுகளை நிறைவு செய்த ரெனால்ட் நிசான் நிறுவனம்!! பெருமிதம் கொள்வதாக நிர்வாக இயக்குநர் பேச்சு!!

Photo of author

By Sakthi

15 ஆண்டுகளை நிறைவு செய்த ரெனால்ட் நிசான் நிறுவனம்!! பெருமிதம் கொள்வதாக நிர்வாக இயக்குநர் பேச்சு!!

Sakthi

15 ஆண்டுகளை நிறைவு செய்த ரெனால்ட் நிசான் நிறுவனம்!! பெருமிதம் கொள்வதாக நிர்வாக இயக்குநர் பேச்சு!!

தமிழகத்தில் ரெனால்ட் நிசான் நிறுவனம் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் 15 ஆண்டுகள் கடந்தததை நினைத்து பெருமிதம் கொள்வதாக கூறியுள்ளார்.

ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுவனமான ரெனால்ட் நிசான் நிறுவனம் தமிழகத்தில் தனது உற்பத்தியை கடந்த 2008ம் ஆண்டு தொடங்கியது. அன்று முதல் இன்று வரை ரெனால்ட் நிசான் நிறுவனம் சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை தயாரித்துள்ளதாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் அடுத்த சில ஆண்டுகளில் இரண்டு புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் உள்பட புதிதாக ஆறு மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளதாக ரெனால்ட் நிசான் நிறுவனம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கார் உற்பத்தியை தொடங்கிய ரெனால்ட் நிறுவனம் 15 ஆண்டுகள் ஆண்டுகளை கடந்தது தொடர்பாக ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கீர்த்தி பிரகாஷ் அவர்கள் “ரெனால்ட் நிசான் நிறுவனம் கார் தயாரிப்பு உற்பத்தியை தமிழகத்தில் தொடங்கி 15 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்த மிகப் பெரிய மைல்கல்லை எட்டியது நினைத்து பெருமிதம் கொள்கிறோம்” என்று கூறினார்.