இந்த வகை வாகனங்களின் வாடகை உயர்வு! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!
இந்த வருட பட்ஜெட் தாக்கலில் பெட்ரோல் விலை வானத்தை எட்டுமளவுக்கு உயர்ந்துள்ளது.இதைத் தொடர்ந்து போக்குவரத்து மூலம் செல்லும் காய்கறி,பழங்கள் என ஆரம்பித்து அனைத்தின் விலையும் அதிகரித்தது.விலை அதிகரித்தால் பாமர மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.இதைத்தொடர்ந்து லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தினர்.
அவர்கள் எவ்வகையான போராட்டம் நடத்தியும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை குறைக்கவில்லை.முன்தினம் நரேந்திர மோடி ஆன்லைன் மூலம் மீட்டிங் ஒன்றை நடத்தினார்.அதில் அவர் கூறியது வருங்காலத்தில் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.இயற்கையில் நாம் ஒன்றாகுவோம் என பின்னாடி நடக்குமோ நடக்காதோ அதை பற்றி பேசினார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பை பற்றி சிறிதும் பேசவில்லை.இந்தவகையில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் பொதுக்குழு மற்றும் ஒருகினைந்த மோட்டார் உரிமையாளர் தொழிலார்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டமானது சென்னையிலுள்ள மாதவரத்தில் நடைபெற்றது.நடந்த பொதுக்கூட்டத்தில் லாரிகளுக்கு தற்போது இருந்த வாடகை தொகையிலிருந்து 30 சதவீதம் உயர்த்த வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.
மேலும் டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும் எனவும் கூறினர்.பழைய வாகனங்கள் அழிப்பு 15 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என பல தீர்மானங்களை கொண்டு வந்தனர்.இவர்களின் இம்மாரியான தீர்மானங்கள் விலை வாசியை அதிக அளவு உயர்த்தும் என கருதப்படுகிறது.