ஃபர்ஸ்ட் அட்டாக் நுரையீரலை தாக்குவதாக தகவல்!!
டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் எச்சரித்துள்ளார்!!
சென்னையில் இன்று ஆராய்ச்சியின் போது ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்படுகின்றார்கள்.
மேலும் தற்போது ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் என்னும் நோய் வந்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இதைக் கேட்பதற்கே புதிதாக இருக்கிறது அல்லவா. மேலும் இது ஒரு வகையான புறாவின் எச்சத்தால் வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் நுரையிடலில் நோய் தொற்று ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.இது புறாக்கள் மற்றும் வவ்வால்களின் எச்சங்களின் மூலம் பாதிப்பு ஏற்படுகிறது.
மத்திய தென்கிழக்கு நாடுகள் மத்திய அட்லாண்டிக் நாடுகளில் இந்தப் பூஞ்சைகள் பெருமளவு வளர்கின்றன. இந்த வியாதி வந்தால் சிகிச்சை தேவைப்படாது. அதேபோன்று நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களிடம் இந்நோய் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.இந்த நோய் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து உடல் முழுவதும் பரவி விடும். இந்நோயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வறட்டு இருமல், நெஞ்சு வலி, மூட்டு வலி, சிவப்பாக உள்ளங்கால்களில் வீங்குதல் போன்ற மாற்றங்கள் ஏற்படும்.
இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக அதிகளவு வியர்வைகள் சுரக்கும். மேலும் சுவாசிக்க முடியாது. இரும்பும் போது ரத்தம் வெளிப்படும். இவ்வகை பூஞ்சை பாதிப்பால் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது. இந்த நோயைப் பற்றி டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்திடம் ஒன் இந்தியா சார்பில் பேசினோம். புறா மற்றும் வௌவாலின் எச்சத்தால் இந்த நோய் ஏற்படுகிறது எனவும் இது மிகவும் அரிதான நோய் என்று கூறினார்.
மேலும் இந்த பூஞ்சை பாதித்த பறவைகளின் எச்சத்தால் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறினார்.புறாக்களுக்கு உணவு கொடுப்பது மற்றும் தண்ணீர் கொடுப்பது ஆகியவை மட்டுமே செய்ய வேண்டும். புறாக்களின் எச்சில் அருகே செல்வது பிறகு அவற்றை சுத்தம் செய்வது போன்றவை பெருமளவு தவிர்க்க வேண்டும். எனவே ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் என்பது மிகவும் அரிதான நோய்.
இவ்வகை நோய் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படாது. புறாக்கள் மற்றும் வவ்வால்கள் இடமிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மேற்கூறிய இந்த பூஞ்சை பாதித்த பறவைகளுக்கு மட்டுமே இன்னும் இருக்கும் என்று கூறினார். எனவே பறவைகளிடமிருந்து குறிப்பாக புறாக்கள் மற்றும் வவ்வால்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.