மீண்டும் ஏன் அரசியல்?.. ரஜினி ஒரு காலி பெருங்காய டப்பா!.. இப்படி சொல்லிட்டாரே!…

Photo of author

By அசோக்

மீண்டும் ஏன் அரசியல்?.. ரஜினி ஒரு காலி பெருங்காய டப்பா!.. இப்படி சொல்லிட்டாரே!…

அசோக்

Superstar breaks the secret about MGR and Janaki Ammal!!

இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். பாட்ஷா பட விழாவில் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது என பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும் ரஜினி பகைத்துக்கொண்டார்.

எனவே, ரஜினி அரசியலுக்கு வருவார் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், திமுகவையும், மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் கூட்டணி சேர வைத்து அந்த கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார். ரஜினி ஆதரவு கொடுத்ததால் மக்கள் அந்த கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய அதிமுக தோற்றுப்போனது.

அதன்பின் தொடர்ந்து நடித்த பல படங்களிலும் ஜெயலலிதாவை மறைமுகமாக தாக்கி வசனம் பேசி வந்தார் ரஜினி. ஜெயலலிதாவை மனதில் வைத்தே படையப்பா படத்தில் நீலம்பரி வேடத்தை உருவாக்கினார்கள். இதை அப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரே ஊடகம் ஒன்றில் ஒத்துகொண்டார். பாண்டியன், அண்ணாமலை, முத்து, படையப்பா, பாபா என எல்லா படங்களிலும் அரசியல் வசனம் பேசினார் ரஜினி.

rajinikanth

ரஜினி எப்படியும் அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் 25 வருடங்களாக காத்திருந்த நிலையில் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு பின்னர் டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். எனது உடல்நிலைக்கு அரசியல் செட் ஆகது’ என சொல்லிவிட்டார். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் நினைவு நாளான இன்று ரஜினி வெளியிட்டுள்ள வீடியோவில் ‘பாட்ஷா பட விழாவில் அந்த படத்தின் தாயரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் மேடையில் இருக்கும்போதே நான் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசினான். இதனால், கோபமடைந்த ஜெயலதா ஆர்.எம்.வியை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கிவிட்டார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். ஜெயலலிதாவை நான் எதிர்க்க பல காரணங்கள் இருந்தாலும் இது முக்கியமான காரணம்’ என சொல்லியிருக்கிறார்.

திடீரென ஏன் இந்த விஷயத்தை ரஜினி பேசினார் என தெரியவில்லை. அரசியலில் இல்லை என்றாலும் தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேச வேண்டும் என அவர் ஆசைப்படுகிறாரா என்பதும் தெரியவில்லை. இந்நிலையில், இதுபற்றி ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் மணி ‘என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீர்கள் என சொல்வார்.

mani

ஆனால் தன் இருப்பை காட்டிக்கொள்ள இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை இப்படி எதையாவது செய்வார். இவருக்கு மக்களிடம் எந்த செல்வாக்கும் இப்போது இல்லை. அரசியலுக்கு வருவேன் என ஒரு தலைமுறை ரசிகர்களை ஏமாற்றியவர் இவர். பழைய அரசியல் கதையை இன்று இவர் பேசவேண்டிய அவசியமென்ன? ரஜினி ஒரு காலி பெருங்காய டப்பா. இப்படி சர்ச்சையாக பேசி கவனத்தை ஈர்க்க பார்க்கிறார். இதை யாரும் கண்டுகொள்ள வேண்டாம்’ என சொல்லியிருக்கிறார்.

Picture Courtesy : Find time Media…