IPL: ஐபிஎல் கிரிக்கெட்டின் 18வது சீசன் நடைபெற்று வருகிறது. அதில் இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோத உள்ளனர். முன்னத ஐபிஎல் தொடர்களில் கிட்டத்தட்ட ஆறு முறை இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில், ஒரு முறை மட்டுமே மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இம்முறை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர்பார்த்த அளவிற்கு களம் காண முடியவில்லை. முதலில் போட்டியிட்ட டெல்லி, இரண்டாவதாக பஞ்சாப் உள்ளிட்டவர்களிடம் தோல்வி சந்தித்தது.
ஹைதராபாத்தை மட்டும் எதிர்த்து போராடி புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது. ஆனால் பஞ்சாப் பிடம் சொந்த மண்ணிலேயே லக்னோ தோற்றதால் பலரும் எதிர் விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக கேப்டன் ரிஷப் பண்ட் சரியில்லை, ஆடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டி மிகப்பெரிய தோல்வி எனக் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி தோல்வி அடைந்த அடுத்த கனமே விளையாட்டு மைதானத்தில் லக்னா சூப்பர் ஜெயன்ட்ஸ் உரிமையாளருக்கும் ரிஷப் பண்ட்-டுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.
இது ரீதியான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் தீயாக ஷேர் ஆகிறது. இதை வைத்துதான் கட்டாயம் ரிஷப் பண்ட் இனி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு கேப்டனாக முடியாது எனக் கூறி வருகின்றனர். அதேபோல கடந்த இரண்டு போட்டிகளிலும் 17 ரங்கலிலேயே வெளியேறி உள்ளார். மேற்கொண்டு இவர் தலைமை பதவியிலிருந்து விலகும் பட்சத்தில் தனது திறமையை வெளிக் கொண்டு வர அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். இன்று நடைபெற போகும் மும்பை இந்தியன்ஸ் உடன் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் தோல்வி அடைந்தால் கட்டாயம் ரிஷப் பண்ட் பல விமர்சனங்களுக்கு ஆளாக கூடுவார் எனக் கூறுகின்றனர்.