பாஜக கூட்டணியா… இல்லை ஜெயிலா? விஜய்யை மிரட்டும் மத்திய புள்ளி!!

0
96
Reports have surfaced that Vijay has been threatened by the Center to send him to jail in the Karur case for not forming an alliance with the BJP.
Reports have surfaced that Vijay has been threatened by the Center to send him to jail in the Karur case for not forming an alliance with the BJP.

TVK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்களின் கூட்டணியை தேர்ந்தெடுத்து வருகின்றனர். ஆரம்பத்தில் விஜய் அரசியலுக்குள் நுழைந்த போது ஆட்சியில் பங்கு சம உரிமை எனக் கூறியதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இதனால் பல கட்சிகளின் கூட்டணி உடையும் என்று விஜய் எதிர்பார்த்திருந்தார். ஆனால் இவரை வைத்து அவரவர் தேவைக்கு ஆதாயம் தேடி கொண்டனர்.

அந்தவகையில் ஒவ்வொருவரும் முன்பு இருந்ததை விட தற்போது கூடுதல் எண்ணிக்கையில் தொகுதி என்று கட்சிக்குள் வலுப்பெற்றுள்ளனர். ஆனால் விஜய்யுடன் கூட்டணி வைக்க யாரும் முன் வரவில்லை. இந்த சூழலை பயன்படுத்தி தற்போது பாஜக காய் நகர்த்த ஆரம்பிக்கிறது. சமயம் பார்த்து சிபிஐ மூலம் கரூர் வழக்கில் விஜய்யை விரட்டி வருகிறது.

அந்த வகையில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்குப் பின்னால் பல காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக என்டிஏ கூட்டணியில் நீ இணையாவிட்டால் கட்டாயம் கரூர் வழக்கை வைத்து சிறைக்கு அனுப்பி விடுவோம் என அமித்ஷா மூலம் மிரட்டல் வந்துள்ளதாம். இது ரீதியாக பேச தான் நேற்று விஜய் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியதாக பனையூரிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளது. விஜய், மிரட்டலுக்கு அடிபணிந்து பாஜக கூட்டணியில் இணைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Previous articleஉலக எண்ணெய் சந்தையில் இந்தியா பொறுப்பான நாடு: அமெரிக்க தூதர் பேச்சு!!
Next articleபெரிய ட்விஸ்ட்.. உறுதியாகும் பாஜக+தவெக+அதிமுக கூட்டணி.. உச்சகட்ட பீதியில் ஸ்டாலின்!!