அரசியலில் அடிசறுக்கும் விஜய்.. 1 வருடம் தான் இதையே தாக்கு பிடிக்க முடியவில்லை!! கட்சி நிர்வாகிகளால் வந்த புதிய தலைவலி!!

Photo of author

By Rupa

அரசியலில் அடிசறுக்கும் விஜய்.. 1 வருடம் தான் இதையே தாக்கு பிடிக்க முடியவில்லை!! கட்சி நிர்வாகிகளால் வந்த புதிய தலைவலி!!

Rupa

Reports have surfaced that Vijay is facing hardships from the party executives.

TVK: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி ரீதியாக பல இன்னல்களை சந்தித்து வருவதாக தகல்வல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் கட்சியை தொடங்கியது முதல் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். கட்சி கொடி எனத் தொடங்கி தற்பொழுது நடந்து முடிந்த அனைவருக்காமாக தலைவர் அம்பேத்கார் புத்தக வெளியீட்டு விழா முதல்  அவர் மீது  தொடர் கண்டனங்களை கூறுகின்றனர். குறிப்பாக விஜய்  திமுக மற்றும் பாஜக இருவரையும் தனது எதிரி என கூறியதால் இவர்களின் ஒட்டு மொத்த டார்கெட்டும் தவெக மீது தான் உள்ளது. மேலும் விஜய் அரசியலுக்கு கத்துக்குட்டி என்பதால் அவர்களது நிர்வாகிகளால் பெரும் தலைவலி உண்டாகியுள்ளது.

முன்பு இவர் ஹீரோவாக இருந்த காரணத்தினால் ஊருக்கு ஒரு மன்றம் இருக்கும். ஆரம்ப கட்டக் காலத்திலிருந்து  மன்றம் இருப்பதால் அடிமட்ட பணியிலிருந்து அனைத்து பணிகளையும் ஒரு சிலர் செய்து வந்தனர். அதேபோல அவர்களின் முகமும் அவ்வூர் மக்களுக்கு பெருமளவில் பதிந்துள்ளது. தற்பொழுது கட்சி ரீதியாக வரும் பொழுது முகம் அறியாத புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பதவியை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு பெரும் ஏமாற்றமே, மேற்கொண்டு கட்சியை விட்டு நீங்கவும் துணிந்துள்ளனர்.

இது ஒரு பக்கம் தலைவலியை கொடுக்க மற்றோரு பக்கம் விஜய் கட்சி நிர்வாகிகள் பொது நிகழ்ச்சிகளில் அரசியல் தெரியாமல் பேசி வருகின்றனர். அப்படி பேசி தான் திமுக அதிமுக கூட்டணி அமையும் என கூறியது பெரும் சர்ச்சையாக மாறியது. இதனை பல அரசியவாதிகள் கேலி கிண்டல் செய்து வந்தனர். இதனையடுத்து மற்றொரு நிர்வாகி பேசும் பொழுது, விசிக விற்கு ஒரு பொழுதும் பொது தொகுதி என்பதை கொடுத்ததே இல்லை, தனித் தொகுதியை தான் திமுக கொடுத்துள்ளது என கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் பேசியது பனையூர் பங்களா வரை சென்றுள்ளது. கட்சி நிர்வாகிகள் அரசியல் பற்றி தெரியாமல் பேசுகின்றனர் என விஜய் வருத்தம் தெரிவித்துள்ளார். மேற்கொண்டு 6 மாவட்டங்களில் மாநாடு நடத்துங்கள் என விஜய்-க்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார்களாம். ஆனால் விஜய்-யோ இப்படி மாநாடு நடத்தினால் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு ஒரு வருடம் தான உள்ளது,எப்படி தேர்தலுக்கான பணிகளை செய்வது என கேள்வி எழுப்பியுள்ளாராம்.

அப்படியே மாநாடு நடத்தினாலும் அதன் பணிக்கான செலவுகளை கட்சி நிர்வாகிகளால் சமாளிக்க முடியுமா என கேட்டுள்ளார். கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் பொறுப்பு , அவர்களின் பேச்சு, அரசியல் நகர்ச்சி என இக்கட்டான சூழலை விஜய் சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.