உதவி பொறியாளரிடம் பணி மாறுதல் கோரிக்கை – மாநகராட்சி அலுவலகத்தில் தீ குளித்ததால் பரபரப்பு!

Photo of author

By Savitha

உதவி பொறியாளரிடம் பணி மாறுதல் கோரிக்கை – மாநகராட்சி அலுவலகத்தில் தீ குளித்ததால் பரபரப்பு!

பணி மாறுதல் கோரி உதவிப் பொறியாளரிடம் கோரிக்கை வைத்த மாநகராட்சி சுகாதார ஊழியரை பழிவாங்கும் நடவடிக்கையாக பணி ஏதும் வழங்காததால் மாநகராட்சி அலுவலகத்திலேயே தீ குளித்ததால் பரபரப்பு.

மாநகராட்சி சுகாதாரத் துறையில் மலேரியா பிரிவில் நிரந்தரப் பணியாளராக பணியாற்றி வந்தவர் முனுசாமி இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சாலை மற்றும் கட்டிட பிரிவில் பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

வயது முதிர்வு காரணமாக மீண்டும் சுகாதாரத் துறையிலேயே தன்னை பணியாற்ற வேண்டும் என 72 வது வார்டு உதவி பொறியாளர் தினேஷிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் தினேஷ் தொடர்ந்து பணி மாறுதல் வழங்காமல் வேறு எந்த பணியும் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

இதனால் மன உளைச்சல் இருந்த முனுசாமி நேற்று காலை 72 வது வார்டு மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று உதவி பொறியாளர் அறையில் தான் கொண்டு வந்த ஐந்து லிட்டர் பெட்ரோல் கேனில் இருந்த பெட்ரோல் தனக்குத்தானே ஊற்றி வைத்துக்கொண்டார். இதனை அடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சக ஊழியர்கள் அனுமதித்துள்ளனர். 63 சதவீத தீக்காயத்துடன் முனுசாமி சிகிச்சை பெற்று வருகிறார்.