பதவி ஏற்றதில் இருந்து முதல்வர் பிரதமரை சந்திக்கதா நிலையில் நேற்று தமிழக முதல்வர் பிரதமர் மோடி அவர்களை புதுடெல்லியில் சந்தித்தார்.
பிரதமரை சந்தித்தது மனநிறைவை தருகிறது என்று மு க ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். 25 நிமிடம் நடந்த உரையாடல் சந்திப்பு முடிவுற்ற உடன் தமிழகத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
பேட்டியில் அவர் கூறியதாவது, குரோனா காலகட்டத்தில் பதவி ஏற்றதும் பிரதமரை சந்திக்க முடியாமல் போனது. தமிழகத்தில் குறு நான் இப்பொழுது கட்டுக்குள் வந்துள்ளதால் சந்திக்க அனுமதி கேட்டேன் அவரும் அனுமதி வழங்கினார். முதலில் முதல்வர் ஆனதுக்கு பிரதமர் எனக்கு வாழ்த்துக் கூறினார். அதற்கு எனது நன்றியை தெரிவித்தேன். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பை தருவேன் என்று அவர் உறுதியளித்தார். எந்த ஒரு கோரிக்கையாக இருந்தாலும் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று பிரதமர் கூறினார். தமிழகத்தின் சார்பாக அனைத்து கோரிக்கைகளையும் அறிக்கையாக வெளியிட்டு அவரிடம் சமர்ப்பித்தேன்.
1. கூடுதலாக மக்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும்.
2. செங்கல்பட்டு மற்றும் குன்னூரில் உள்ள தடுப்பூசி மையங்களை செயல்பட அனுமதிக்க வேண்டும்.
3. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
4. நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்.
5. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.
6. மேகதூதம் திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
7. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 ஆக உயர்த்த வேண்டும்.
8. காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும். ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
9. இலங்கை கடற்படையினரால் அவதிக்கு உள்ளாகும் மீனவர்களின் வாழ்க்கைக்கு நிரந்தர தீர்வை கொடுக்க வேண்டும்.
10. கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்
11. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் நிறுவ வேண்டும்.
12. கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
13. புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும்.
14. கட்டாயக் கல்வியை உயர்த்த வேண்டும்.
15. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
16. சென்னை ஐகோர்ட்டின் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும்.
17. உலகப் பல்கலைக் கழகங்களுக்கு தமிழுக்கு இருக்கை வேண்டும்.
18. சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
19. பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.
20. குடியுரிமை மற்றும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு 20 கோரிக்கைகளை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளார் முதல்வர். ஒவ்வொன்றாக மத்திய அரசு நிறைவேற்றும் வரை அவர்களுக்கு அழுத்தம் கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
கோரிக்கைகளுக்கான காரணங்களை பிரதமரிடம் தெரிவித்துள்ளோம். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என பிரதமர் தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் ஈடுபடுவோம் என நேற்று செய்தியாளர்களிடம் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று பேசினார்.