தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி வேண்டுமா?

0
134
TNPL Recruitment 2020-News4 Tamil Latest Online Tamil News Jobs News in Tamil
TNPL Recruitment 2020-News4 Tamil Latest Online Tamil News Jobs News in Tamil

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி வேண்டுமா?

டிஎன்பிஎஸ்சி என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயம் மட்டுமே அரசு வேலைக்கு ஆட்கள் தெரிவு அமைப்பாக பலர் கருதுகின்றனர்.

ஆனால் பல அரசு நிறுவனங்கள் நேரடியாக தங்களுக்கு தேவையான பணியிடங்களை நிரப்பும் நிறுவனங்களாக தமிழகத்தில் உள்ளன. அதில் ஒன்று தான் டிஎன்பில் என அழைக்கப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனம்.

தற்போது அதில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள் 50 என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் தேர்வு செய்யப்படும் நபர் கரூரில் மட்டுமே பணியாற்ற முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Graduate Engineer Trainee (Chemical) – 09
பணி: Graduate Engineer Trainee (Mechanical) – 07
பணி: Graduate Engineer Trainee (Electrical) – 07
பணி: Graduate Engineer Trainee(Instrumentation) – 07
பணி:  Shift Engineer (Chemical) / Assistant Manager (Chemical) – 05
பணி: Plant Engineer (Mechanical) / Assistant Manager (Mechanical) – 05
பணி:  Plant Engineer (Electrical) / Assistant Manager (Electrical) – 05
பணி: Plant Engineer (Instrumentation) / Assistant Manager (Instrumentation) – 05

இணையவழி விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.03.2020

விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சல் அல்லது கூரியர் மூலம் அனுப்ப வேண்டும். 

விண்ணப்ப உறையின் மீது APPLICATION FOR THE POST OF _ ”  விண்ணப்பிக்கும் பணிக்கான பெயரை குறிப்பிட வேண்டும். 

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
CHIEF GENERAL MANAGER-HR
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMIL NADU. 

author avatar
Parthipan K