ஆறு சிறுமிகள் மீட்பு! இந்த விபச்சார தொழில் எனக்கு மட்டுமல்ல முதல்வருக்கும் தான் பங்கு! பாஜக மாநிலத்துணை தலைவரின் அதிர்ச்சி பேட்டி!
விபச்சாரம் நடத்துவது சட்டத்திற்கு எதிரானது என்று கூறினாலும் பல மாநிலங்களில் அது நடைபெற்ற தான் வருகிறது. சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். பாலியல் தொழில் செய்பவர்களை போலீசார் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். குற்றவாளிகளைப் போல் நடத்தக் கூடாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கையில் மேகலாயாவில் மாநிலத் துணைத் தலைவர் நடத்தும் ரிசார்ட்யில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் வந்ததை எடுத்து போலீசார் அந்த ரெசார்ட்டில் திடீரென்று சோதனை நடத்தினார். அப்போது அந்த ரெசார்டில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்து வருவது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி போதை மாத்திரைகள் ,கருத்தடைப்பு மாத்திரைகள் ,காண்டம் போன்றவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி 73 பெயரை அந்த விடுதியில் இருந்து கைது செய்துள்ளனர். இதில் அதிர்ச்சியளிக்கும் செயல் என்னவென்றால் அந்த விடுதியில் 18 வயதிற்கும் குறைவான ஆறு சிறுமிகள் ஒரு தனி அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களையும் போலீசார் மீட்டுள்ளனர். இத்தோடு மது பாட்டில்கள் போன்றவையும் போலீசார் கைப்பற்றினார். ரெசார்டில் ரைட் வருவதை அறிந்த மாநிலத் துணைத் தலைவர் பெர்னாட் என் மாரக் என்பவர் தலைமறைவு ஆகிவிட்டார். போலீசார் அவரை கைது செய்ய தேடி வருகின்றனர். போலீசார் தேடி வருவதை அறிந்த பெர்னாட் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர், நான் தலைமறைவாக இல்லை, இதற்கு அனைத்திற்கும் மேகலாயம் முதல்வர் தான் காரணம்.இவ்வாறு காவல்துறையுடன் சேர்ந்து என்னை சிக்க வைக்க நினைக்கிறார். அதுமட்டுமின்றி நான் நடத்தும் ரெசார்ட்டில் அரசிற்கு எதிரான எந்த செயல்களும் நடைபெறவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் எந்தவித தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.