மனிதனுக்கு விலங்கின் அந்த பாகத்தை வைத்து ஆராய்ச்சி! வெற்றி அடைந்த அதிசயம்!

Photo of author

By Hasini

மனிதனுக்கு விலங்கின் அந்த பாகத்தை வைத்து ஆராய்ச்சி! வெற்றி அடைந்த அதிசயம்!

பொதுவாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு உறுப்பு மாற்றம் செய்யும் முயற்சி, பல ஆண்டுகளாக நடைபெற்ற வண்ணமே உள்ளது. ஆரம்ப காலத்தில் மனிதனுக்கு மிக நெருங்கிய இனமான மனித வகை குரங்குகளிடமிருந்து உறுப்பு மாற்றம் செய்யும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுப்பட்டனர். அதன்பிறகு பல கட்ட முன்னேற்றத்தைத் பெற்றுள்ள ஆராய்ச்சி தற்போது மிகப்பெரிய மைல் கற்களை தொட்டுள்ளது.

ஏனென்றால் பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அதில் அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர். எப்பொழுதுமே பரிசோதனைக்கென்று மருத்துவர்கள் தனி முறையை கையாள்வார்கள். மனிதர்களுக்கு அதை கொடுக்கும் முன்பு எலிகளும், முயல்களும் அல்லது வேறு ஏதும் விதமான விலங்குகளுக்கு பரிசோதித்து பார்த்து விட்டுத்தான் அதை மனிதர்களுக்கு ஏற்புடையதாக அறிவிப்பார்கள்.

அந்த வகையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த என்.ஒய்.யு லங்கோன் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ஒரு நபருக்கு சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்தது. அதன் காரணமாக அவருடைய குடும்பத்தினரின் அனுமதியைப் பெற்று, மருத்துவ விஞ்ஞானிகள் பன்றியினுடைய சிறுநீரகத்தை பொருத்தி சோதனை மேற்கொண்டனர்.

அந்த சிறுநீரகத்தை உடலுக்கு வெளியே வைத்து அவரின் ரத்தக்குழாய்களின் மூலம் இணைக்கப்பட்டு மூன்று நாட்கள் வரை அப்படியே பராமரிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த சிறுநீரகம் மூளை சாவு அடைந்த நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் நிராகரிக்கப் படாமல் இயங்க ஆரம்பித்தது. சிறுநீரக செயல்பாட்டின் சோதனை முடிவுகள் அனைத்தும் மிகவும் சாதாரணமாக இருந்தது என்று இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய மருத்துவ மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ராபர்ட் கூறியுள்ளார்.

மேலும் அந்த மூளை சாவு அடைந்த மனிதனுடைய சிறுநீரகம் இருக்கும் போது, அதன் செயல்பாடு மிக மோசமாகவும், கெரோட்டின் அளவு அசாதாரணமாகவும் இருந்தது. ஆனால் பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திப் பார்க்கும்போது, அந்த சிகிச்சைக்குப் பிறகு வழக்கமான நிலைக்கு வந்துவிட்டது என தெரிவித்து அவர் ஆச்சரியப்பட்டார். இது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறையில் நிச்சயம் ஒரு மைல் கல்லாகும் என்றும் தெரிவித்தார்.

லட்சக்கணக்கானோர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலையில், உறுப்புகளின் பற்றாக்குறையை நீக்கும் வகையில் இது இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் இனங்களுக்கு இடையேயான இடைவெளி குறைந்து உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.