தன்னுடைய மகனுக்கு கட்சியின் முக்கிய பொறுப்பை வழங்கிய வைகோ! கொள்கை என்னானது?

0
74

மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் மகன் துரை வைகோ அவர்களை கட்சிக்குள் கொண்டு வரவேண்டும் கட்சியின் அடுத்த வாரிசாக துரை வைகோவை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த கட்சியில் வலுத்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில், வாரிசு அரசியலை எதிர்த்துதான் திமுகவில் இருந்து வெளியே வந்தார் வைகோ தன்னுடைய கட்சியிலும் வாரிசை கொண்டு வருவதா என்ற விமர்சனத்திற்கு ஆளாக நேரிடலாம் என உண்மையிலேயே வைகோ அஞ்சினார் என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால் மாவட்டச் செயலாளர்கள் உடைய தொடர் வற்புறுத்தல்களை தொடர்ந்து இது தொடர்பாக விவாதிப்பதற்காக நேற்றைய தினம் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முடிவில் துரை வைகோ மதிமுகவின் தலைமை கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மதிமுகவின் கொள்கை ரீதியாக இந்தப் பதவியில் அவரை நியமிக்க எனக்கு அதிகாரம் இருந்தாலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 106 நபர்களில் 104 பேர் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்று அறிவித்திருக்கிறார் வைகோ.