எட்டாம் தேதி வரை முன்பதிவு நிறைவு! தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு!
பக்தர்கள் அதிகளவில் மாலை அணிந்து வரும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஆண்டு சாமி தரிசனம் செய்வதற்கு நடை திறக்கப்பட்டது.நடை திறக்கப்பட்டு நாளொன்றுக்கு ஆயிரகணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டனர்.
அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல சீசன் கடந்த மாதம் 27ஆம் தேதி நிறைவடைந்தது.மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் 30 தேதி மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டது.அப்போது 32 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர்.நேற்று ஆங்கில புத்தாண்டு அதனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
மேலும் இதற்காக முன்னதாகவே முன்பதிவு செய்யப்பட்டது.90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை தரிசனம் வருகிற 14 ஆம் தேதி நடைபெறும்.மேலும் 19 ஆம் தேதி பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இதில் வரும் ஜனவரி எட்டாம் தேதி வரை தினமும் 90ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.அதனால் அந்த நாட்களில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்ய முடியாது. சபரிமலையில் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் வருகின்றார்கள் அதனால் அவர்களின் சிரமத்தை கருத்தில் கோடு உடனடி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.