ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும்?

0
237
Reserve Bank announced! Will Online Money Transactions Be Charged Anymore?
Online e-banking mReserve Bank announced! Will Online Money Transactions Be Charged Anymore?oney transfer concept showing two mobile phones linked by a stream of gold coins in a colorful vector illustration

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும்?

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மாறி வருகிறது. இந்நிலையில்  ஹோட்டல்கள், ஷாப்பிங் மால், வணிக வளாகங்கள், கடைகள், மெடிக்கல் ,சில்லறை வியாபார கடை முதல் மொத்த வியாபார கடைகள் , துணி கடைகள்  என அனைத்து இடங்களிலும் பணப்பரிவர்த்தனை செய்வது  என்பது க்யூ ஆர் மூலம்  நடந்து வருகிறது.

மக்கள் அனைவரும் தற்போது அவரவர்களின் வங்கி கணக்கில் இருந்து நேரடிய பணம் செலுத்துகின்றனர். அதற்காக   கூகுள் பிளே, ஃபோன் பே போன்ற செயலி மூலம் அன்றாட தேவைக்கான பொருட்களையும் வாங்கும் பொழுது பணம் பரிவர்த்தனை செய்கின்றனர்.

மேலும் பெரிய தொகையிலிருந்து சிறிய தொகை வரையிலும் வீட்டிலிருந்தபடியே ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதற்காகவும் இது போன்ற ஆன்லைன் செயலிகளை பயன்படுத்துகின்றார்கள். இந்நிலையில் ரிசர்வ் வங்கியானது பண பரிவர்த்தனை செய்யும் பொழுது அதற்கான குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்க படலாம் எனவும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ஆனது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதுணை முதலமைச்சர் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை! டெல்லியில் பரபரப்பு!
Next articleஇதுதான் உங்கள் சமூக நீதியா? முதல்வருக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!