திருப்பதி தேவஸ்தானத்திற்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி! இனி வெளிநாட்டு பணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாதா?

Photo of author

By Parthipan K

திருப்பதி தேவஸ்தானத்திற்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி! இனி வெளிநாட்டு பணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாதா?

Parthipan K

Reserve Bank fined Tirupati Devasthanam! Will foreign currencies no longer be accepted?

திருப்பதி தேவஸ்தானத்திற்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி! இனி வெளிநாட்டு பணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாதா?

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று இருந்து வந்தது. அதனால் எந்த ஒரு கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல். முற்றிலும் குறைந்த நிலையில் அனைத்து கோவில்களிலும்  பக்தர்கள் சாமி தரிசனும் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் அதிக அளவு பக்தர்கள் வருகை தரும் கோவில்களில்  ஒன்றாக இருப்பது திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் திருமலை பெருமாள் கோவில் மற்றும் 70 இதர  கோவில்கள் இருக்கின்றது.

கடந்த ஆண்டு மட்டும் 1450 கோடி உண்டியல் வசூல் கிடைத்த நிலையில் தற்போது திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதில் வெளிநாட்டு நன்கொடையை அனுமதிப்பதில் புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டதால். நன்கொடை கொடுத்த நபரின் பெயரை அறிவிக்க வேண்டுமானால் உண்டியல் போடும் நபர்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமக்கு கிடைத்த வெளிநாட்டு நன்கொடையை வங்கியில் செலுத்தி இந்திய ரூபாயாக மாற்ற முடியாமல் திருப்பதி தேவஸ்தானம் தவித்து வருகின்றது. உண்டியல் நன்கொடைகள் என விவரிக்கப்படும் வெளிநாட்டு பங்களிப்புகளை டெபாசிட் செய்வதற்கு பாரத் ஸ்டேட் வங்கி தடை செய்துள்ளது. வெளிநாட்டு நன்கொடையாக கடந்த ஆண்டில் 26.86 கோடி ரூபாய் மாற்ற முடியாத சூழல் நிலவி வருகிறது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முறையிட்டது. அதில் 15.5 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர், 5.9 கோடி மலேசியன் ரிங்கிட்ஸ்,4.6 கோடி மதிப்புள்ள சிங்கப்பூர் டாலர் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதனை பரிசீலனை செய்ய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு நிதி பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டு வரவு செலவு அறிக்கையில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ 3.19 கோடி அபராதம் விதித்துள்ளது.

அது மட்டுமின்றி பிரச்சனைக்கு தீர்வு காண ஆந்திரா அரசின் உதவியை திருப்பதி தேவஸ்தானம் நாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ 1.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.