இந்தியாவில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார சரிவு;ரிசர்வ் வங்கி ஆளுநர்?

Photo of author

By Pavithra

இந்தியாவில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார சரிவு;ரிசர்வ் வங்கி ஆளுநர்?

Pavithra

பாரத ஸ்டேட் வங்கியின் வங்கியியல் மற்றும் பொருளாதார மாநாடு இன்று நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்,இந்தியாவில்100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் உற்பத்தி,வேலை வாய்ப்பில் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கியுள்ளது.

இந்தியா மட்டுமின்றி இது உலகெங்கிலும் உள்ள வேல்யூ சங்கிலிகள், தொழிலாளர் மற்றும் மூலதன இயக்கங்களை முடக்கியுள்ளது.நிதி அமைப்பை பாதுகாக்கவும்,பொருளாதார பாதிப்பை சரி செய்யவும் பல நடவடடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் 2019 பிப்ரவரி முதல், ஒட்டுமொத்த அடிப்படையில்,கொரோனா தாக்கம் தொடங்கும் வரை ரெப்போ விகிதத்தை 135 அடிப்படை புள்ளிகள் குறைத்தாகவும்,பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலையை சமாளிப்பதற்காக இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் உரையில் தெரிவித்துள்ளார்.