இரவில் தூங்கி கொண்டிருந்த சிறுமிக்கு கட்டப்பட்ட தாலி ; காவல் நிலையத்தில் சிறுமி புகார்

0
191

வேலூரில் 15 வயது சிறுமி தனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக கூறி புகார் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் உள்ள 15 வயது சிறுமிக்கு அவர் பெற்றோர்கள் இரவில் அவருக்கு கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.இதனை அடுத்து சிறுமி மறுநாள் காலை விருதம்பட்டு காவல் நிலையத்தில் தனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து விட்டதாக புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து சமூக
நலத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.அதன் பிறகு சமூக நலத்துறை அதிகாரிகள் அந்த சிறுமியின் பாதுகாப்பு கருதி அவரை காப்பகத்தில் சேர்த்தனர்.இதனை அடுத்து சிறுமியின் பெற்றோரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி,ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி,சோளிங்கர் பகுதியை சேர்ந்த 13 வயது ஆகியோருக்கு நடைபெற இருந்த கட்டாய திருமணம் நிறுத்தப்பட்டு பின்பு இவர்களும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

Previous articleவிண்ணில் பாய்ந்த சீன ராக்கெட் வெடித்து சிதறியதால் சீன விஞ்ஞானிகள் சோகம்!
Next articleஇந்தியாவில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார சரிவு;ரிசர்வ் வங்கி ஆளுநர்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here